Fri. May 10th, 2024

ஹாரி – மேகன் இனி பொதுமக்கள் வரிப்பணத்தை பயன்படுத்தமாட்டார்கள்.

அரச குடும்ப கடமைகளில் இருந்து இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியினர் விலகுகிறார்கள். இனி அவர்கள் பட்டங்களை குறிப்பிட்டு அழைக்கப்பட மாட்டார்கள் என்றும் பிரிட்டன் மக்களின் வரிப்பணத்தையும் பயன்படுத்தமாட்டார்கள் எனவும் பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

பிரிட்டனில் அவர்களுக்கான குடும்ப வீடான ஃப்ரோக்மோர் காட்டேஜ்ஜை புதுப்பிக்க மக்கள் வரிப்பணத்தில் இருந்து பெறப்பட்ட 2.4 மில்லியன் பவுண்டுகள் நிதியை திரும்பிக் கொடுக்க ஹாரி மற்றும் மேகன் முடிவு செய்துள்ளார்கள் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியினர் முடிவுக்கு பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் முழு ஆதரவு அளித்துள்ளார். தனது பேரக்குழந்தைகளை சுதந்திரமாக செயல்பட அனுமதித்த அவர் எப்போதும் ஹாரி-மேகன் மற்றும் ஆர்ச்சி என் குடும்ப உறுப்பினர்களாகவே இருப்பார்கள் என்று நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஹாரி மற்றும் மேகன் இருவரும் கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் மாறி மாறி தங்கள் காலத்தை கழிக்க உள்ளார்கள். பொருளாதார சுதந்திரத்தை பெறும் வகையில் இவரும் முழு நேரப் பணிக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளார்கள். வேலைக்கு சென்று அந்த பணத்தில் உழைத்து வாழ விரும்புவதாக முன்பே ஹாரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கதது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்