Tue. May 21st, 2024

உலகையே உருட்டி மிரட்டும் கொரோனா. விமான நிலையத்தில் விசேட பரிசோதனை.

கொரோனா வைரஸ் எனும் சீனாவில் பரவி வரும் நோய் தொற்றுக்கு உள்ளன பயணிகளை இனம் காணும் நடவடிக்கைகள் நாளை முதல் கொழும்பு பண்டாரநாயக்கா விமான நிலையத்தில் முன்னெடுக்க பட உள்ளதாக விமான நிலையத்தின் கடமை நேர அதிகாரி தெரிவித்தார். ஸ்கேனர் இயந்திரங்களை பயன்படுத்தி பரிசோதனை மேட்கொள்ளபடும் என்று அவர் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ்.. உலக நாடுகளை உருட்டி மிரட்டி கொண்டிருக்கும் கொடிய நோய். சீனாவில் இதன் தாக்கம் அதிகமாக இருந்தாலும், இலங்கையில் எந்த காரணத்தை கொண்டும் இது பரவி விடக்கூடாது என்பதில் மிக தீவிரமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை இலங்கை சுகாதார ஸ்தாபனம் எடுத்துள்ளது.

இது வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது என்று மட்டும் அறியப்பட்டுள்ளது. ஆனால் இதை பற்றி முழுமையாக அறிய முடியவில்லை என்றாலும் மிக கொடுமையானது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இதற்கு கொரோனா வைரஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சாதாரண மூச்சு பிரச்சனையை போலதான் அறிகுறி இருக்கும்.. சளி, இருமல்தான் முக்கிய அறிகுறிகள் என்றாலும் பாதிப்போ உயிரை கொல்லும் அபாயத்தை உடையது.. சீனாவிற்கு ஒரு நாளைக்கு ஏராளமானோர் பல்வேறு நாடுகளில் இருந்து செல்கிறார்கள்.. சீனாவில் இருந்தும் ஏராளமானோர் பிற நாடுகளுக்கு பயணம் செய்து வருகிறார்கள். அதனால் உலக அளவிலேயே இந்த கொரோனா வைரஸை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் டைரக்டாக நுரையீரலை தாக்கி.. நிமோனியா காய்ச்சலில் கொண்டு போய் விட்டுவிடுமாம்.. வைரஸ் கிருமிகள் காற்றில் பரவும் தன்மை கொண்டதால், ஒரே நேரத்தில் பலருக்கும் தொற்று ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள்.. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் இருமினாலும், தும்மினாலும், சளியை துப்பினாலும், அதில்கூட வைரஸ் காற்றில் கலந்துவிடுமாம்.. அதை சுவாசித்தால் மற்றவர்களுக்கும் தொற்றிக் கொள்ளுமாம்.

இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை சீனாவில் 139 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்