Sat. May 11th, 2024

விளையாட்டின் மூலம் மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்க முடியும் – உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்க தலைவர் ப.தர்மகுமாரன்

விளையாட்டின் மூலம் மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்க முடியும் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்க தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார்.High performance table tennis academy யினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண இந்துக்கல்லூரியின் குமாரசாமி மண்டபத்தில் நடைபெற்ற மேசைப்பந்தாட்ட பயிற்சி முகாம் நிறைவில் பிரதமவிருந்தினராக கலந்து சிறப்பித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனதுரையில் விளையாட்டு என்பது வினைதிறன் மிக்க மாணவ சமூகத்தை உருவாக்கும் என்பதுடன் சமூகத்தில் ஏற்படும் சவால்களுக்கும் வெற்றிகரமாக முகம் கொடுப்பார்கள். வெற்றி என்பது பெற்றுக்கொள்வது தோல்வி என்பது கற்றுக்கொள்வது வெற்றியை பெற்றுக்கொண்டவர்கள் மகிழ்கிறார்கள் ஆர்பரிக்கின்றார்கள் ஆனால் தோல்வியடைந்தவன் தோல்விக்கான காரணத்தை கண்டறிந்து அதில் இருந்து மீண்டெழுகின்றான். இதுவே வாழ்க்கைக்கான தீர்க்கமான தத்துவமாகும்  இம்முறை நடந்த உலக கிண்ண கால்ப்பந்தாட்டத்தில் அர்ஜன்ரீனா சவுதியிடம் முதல் போட்டியில் தோல்வியடைகிறது சவுதி தனது நாட்டுக்கு விடுமுறை அறிவித்து கொண்டாடுகின்றது ஆனால் மெசி என்ற கால்ப்பந்தாட்ட ஜாம்பவான் நித்திரையின்றி தோல்விக்கான காரணத்தை தேடினான். தனது நாட்டையும் மக்களையும் ஏமாற்றக்கூடாது என திடசங்கர்ப்பம் கொண்டான் நம்பிக்கையை நாணில் ஏத்தினான் இலக்கை உறுதிப்படித்தினான். உலக கிண்ணத்தை கைப்பற்றாது நாடு செல்லமாட்டேன் என சத்தியம் உரைத்தான். எண்ணம் போல் வாழ்க்கை நினைத்தது நடந்தது. இதைத்தான் பிள்ளைகளாகிய நீங்கள் முன்னுதாரணமாக கொண்டு உங்கள் வாழ்க்கையை சவால் மிக்க இவ்வுலகத்தில் வெற்றிகரமாக முன்னகர்த்த வேண்டும். விளையாட்டில் ஈடுபடுகின்ற மாணவர்கள் பல்வேறுபட்ட சவால்களை எதிர் கொள்கின்றனர். போசணை பிரச்சனை வகுப்பறையில் ஏனைய பாட ஆசிரியர்களால் பிரச்சனை, தனியார்கல்வி நிலையத்தால் பிரச்சனை, விளையாட்டு உபகரணங்களை வாங்க முடியாத அளவுக்கு விலையேற்றம் இவ்வாறு பல்வேறு சவால்களை தாண்டி வெற்றி பெறுகின்றீர்கள். ஆனால் அதனை கொண்டாட பலரும் வருவார்கள் இது யதார்த்தம் என்பதை உணர்ந்து உங்களது நம்பிக்கையை கைவிடாது இலக்கு நோக்கி பயணியுங்கள் என சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்