Fri. Apr 26th, 2024

வாழை, தென்னை மீள் சுழற்சி இயந்திரம் கரவெட்டியில்

கரவெட்டி பிரதேச சபையால் குப்பைகளை மீள் சுழற்சிக்குப் பயன்படுத்தப்படும் இயந்திரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கரவெட்டி பிரதேச சபையின் நிதியிலிருந்து இந்த இயந்திரம் பெறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் அவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது,
முள்ளி பகுதியில் மீள் சுழற்சி நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள இடர் சூழ் நிலையால் திறப்பு விழா தாமதமாகிக் கொண்டு செல்கிறது.
வடமராட்சியில் நகர்ப்புற
மக்கள் இடநெருக்கடிக்கு மத்தியிலும் வாழை, தென்னை போன்ற மரங்களை நாட்டி பயன்பெறுகின்றனர். ஆனால் அவற்றின் பயன்தரு காலம் முடிவடைந்ததும் அதனை அப்புறப்படுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். தற்போது  வாழைக்குற்றி தென்னோலை போன்றவற்றை மீள் சுழற்சி செய்யும் இயந்திரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அடுத்து தென்னங்குற்றி மற்றும் பனைக்குற்றிகள் போன்றவற்றையும் மீள் சுழற்சி செய்யும் இயந்திரம் பெறப்படவுள்ளது. பயணத் தடை தளர்த்தப்பட்டதும் முள்ளியில் அமைந்துள்ள நிலையம் திறக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்