Sun. Apr 28th, 2024

வழமைக்கு திரும்ப முயற்சிக்கும் ஐரோப்பிய நாடுகள் , சமாளிக்க முடியாமல் திணறும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து

People wear a protective facemask as they walk in front the Eiffel tower, in Paris, on March 12, 2020 during a world COVID-19 outbreak. - The novel coronavirus "is a controllable pandemic" if countries step up measures to tackle it, the head of the World Health Organization (WHO) said March 12, 2020. More than 4,500 people have died, according to an AFP tally, while the WHO said some 125,000 cases had been reported from 118 countries and territories. The pandemic has disrupted cultural and sporting events around the world as authorities try to prevent large gatherings. (Photo by Ludovic Marin / AFP) (Photo by LUDOVIC MARIN/AFP via Getty Images)

கோரோனோ தொற்று என்ணிக்கை 1.5 மில்லியனை தொட்டுள்ளநிலையில் சில ஐரோப்பிய நாடுகள் ஏற்படுத்தியிருந்த தடைகளை நீக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
நோர்வே , டென்மார்க், ஆஸ்திரியா ஜெர்மனி இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்றநாடுகள் தொற்றுகளின் வேகம் குறைந்து வருவதாக தெரிவதால் , ஏற்படுத்தியுள்ள கட்டுப்பாடுகளை படிப்படியாக குறைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளன.
தற்பொழுது வரவுள்ள ஈஸ்டர் வாரஇறுதியை தொடர்ந்து சிலநாடுகள் இந்த நடைமுறையை கொண்டுவரவுள்ளதாக அறிவித்துள்ளநிலையில் , மே 4 ஆம்திகதிக்கு பின்னர் இத்தாலியில் இத்தகைய நடைமுறை கொண்டுவரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த நிலையில் எந்த வித இறுக்கமான கட்டுப்பாடுகள் இன்றி பாடசாலைகளை திறந்து சாதாரணமாக ஸ்வீடன் நாடு இந்த கோரோனோ வைரஸை எதிர்கொண்டுவருவது பைத்தியக்காரத்தனமான முடிவு என்று பலராலும் விமர்சிக்கபட்டாலும் இதுவரை அதனால் சாட்டை செய்யாமல் ஸ்வீடன் அரசாங்கம் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது. சாதாரணமாக 600 பேருக்கு நாளொன்றுக்கு தொற்று ஏற்படுவருவதுடன் 100 க்கும் அதிமானோர் நாளொன்றுக்கு இறந்துவருவது குறிப்பிடத்தக்கது .
தற்பொழுது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்றநாடுகளே கோரோனோவை சமாளிக்கமுடியாமல் திணறிவருவதுகுறிப்பிடத்தக்கது . அமெரிக்காவில் 250,000 மக்களும் இங்கிலாந்தில் 60,000 க்கு மேற்பட்ட மக்களும் இந்த கோரோனோ தாக்கத்தால் இருக்கக்கூடும் என்று சமீபத்தைய அறிக்கைகள் மற்றும் இதுசம்பந்தமான கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்