Sat. Apr 27th, 2024

வடமராட்சி பகுதியில் இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு பணிஸ் வகைகளின் விலைகளில் மாற்றமில்லை

ஏனைய இடங்களை விட வடமராட்சி பகுதியில் பணிஸ் வகைகளின் விலைகளை குறைந்த விலையில் வடமராட்சி பேக்கரி உரிமையாளர் சங்கத்தினர் வழங்கி வருகின்றனர்.

தற்போது நாட்டில் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கொழும்பு மற்றும் யாழ் மாவட்டங்களில் பாணின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்ட போதிலும் பணிஸ் வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை என யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
இதற்கமைய வடமராட்சி பேக்கரி உரிமையாளர் சங்கத்தினரால்  பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் 170 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்ட போதிலும் பணிஸ் வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரீ பணிஸ் 35 ரூபா, சங்கிலி பணிஸ் 40 ரூபா, கொம்பு பணிஸ் மற்றும் ஜாம் பணிஸ் 50 ரூபா,  கிறீம் மற்றும் கறி பணிஸ் 60 ரூபா,  பார் பணிஸ் 25 ரூபா,  முக்கோண பணிஸ் 70 ரூபா எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்