Sat. May 4th, 2024

ராகம வைத்தியசலையினால் எரியூட்டப்படும் சடலங்கள்

ராகம வைத்தியசாலையின் அதிகாரிகள் கொரோனா வைரஸால் இறந்த 42 பேரின் உடல்களை நேற்று தகனம் செய்துள்ளார்கள். இந்த சடலங்கள் ராகம போதனா மருத்துவமனை பிணவறையில் குவிக்கப்பட்டிருந்தன.

அமைச்சரும், கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நிமல் லான்சா இது தொடர்பில் தெரிவிக்கும் பொழுது ,பெரும்பாலான உடல்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியளவில் தகனம் செய்யப்பட்டன.

மீதமுள்ள உடல்கள் அடுத்த சில நாட்களில் தகனம் செய்யப்படும் என்று அமைச்சர் கூறினார்.

கோவிட் தொடர்பில்லாத காரணங்களுக்காக இறந்த மேலும் 40 பேரின் உடல்கள் ராகம போதனா மருத்துவமனை பிணவறையில் குவிக்கப்பட்டிருப்பதாகவும் அவைகளை தகனம் செய்ய நீதிமனற உத்தரவு பெறப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார் .
இந்த சடலங்களை யாரும் உரிமை கோரவில்லை என்றும் அவர் கூறினார்.

ராகம போதனா மருத்துவமனை கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் ஒன்றாகும். கொரோனா வைரஸுக்கு அதிகமான மக்கள் சிகிச்சை பெறுவதால், அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய மருத்துவமனைக்கு கூடுதல் படுக்கைகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது என்றுமமைச்சட்ட தெரிவித்தார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்