Sat. Apr 27th, 2024

யூனியனிடம் மண்டியிட்டது மானிப்பாய் இந்து

யூனியன் கல்லூரி அணியின் பந்துவீச்சுக்கு முகம்கொடுக்க முடியாமல் மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி திணறியது.
19 வயது பிரிவு 3 துடுப்பாட்டப்  போட்டியில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி 69 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணியை எதிர்த்து மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி மோதியது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய யூனியன் கல்லூரி அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றனர். அவ்வணி சார்பில் டிமில்ரன் 28, பிரபதாஸ் 19 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் ஜதீசன் 4 இலக்குகளையும் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி சகல இலக்குகளையும் இழந்து 80 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். அவ்வணி சார்பில் திலக்சன் 18 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணி சார்பில் விதுரன், கெளசிகன்,  பிரபதாஸ் ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்