Thu. May 2nd, 2024

யாழில் நீதிபதியின் செயல்பாடு, சிக்கலில் பொலிஸார் மற்றும் பொதுமக்கள்

நான்கு தினங்களுக்கு முன் யாழ்ப்பாணத்திலுள்ள சந்தி ஒன்றில்  பாதுகாப்பு கடமையில் இருந்த  ராணுவமும்  போலீசாரும் அவ்வழியாக வந்த கார் ஒன்றை மறித்து சோதனை செய்ய முற்பட்டனர். காரில் இருந்தவர்கள் முக கவசம் அணியாதது குறித்து பொலிஸாரால் கேள்வி எழுப்பப்பட்டது. இதை சிங்கள மொழியிலேயே பொலிஸார் கேட்டிருந்தனர்.  இந்த நிலையில் காரில் இருப்பவர் நீதிபதி என்று நீதிபதியின் பாதுகாவலரால் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் காரில் நீதிபதி என்று எவ்விதமான அடையாளங்களும் இருந்திருக்கவில்லை.  இருந்த போதிலும் காரினை தொடர்ந்து செல்ல பொலிஸார் அனுமதி அழைத்திருந்தார்கள்.

இந்த நிலையில் நீதிமன்றம் சென்ற குறித்த நீதிபதி உடனடியாக அந்த பகுதிக்கான பொலிஸ் பொறுப்பாளரை அழைத்து உடனடியாக தன்னை மறித்த பொலிஸாரை தன் முன் நிறுத்திகுமாறு கட்டளையிட்டார்.    அவரை பொறுப்பதிகாரி உடனடியாக நீதிமன்றத்தில் அவரை முன்னிலைப் படுத்தினார்.  நீதிபதி  போலீசாரை அழைத்து நீங்கள் கடமை நேரத்தில் வெற்றிலை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் என குற்றம் சுமத்தினர். கடமையில் நின்ற  போலீசார் அவர் எந்தவிதமான வெற்றிலை பாக்கு சாப்பிடும் பழக்கம் இல்லாதவர் என்று பொலிஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அவர் நீதிமன்றத்தில் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். மேலும் தான் கடமைக்கு வரும் நேரங்களில் தன்னுடைய பாதுகாப்பு கருதி நகரப் பகுதியில் 100 மீட்டருக்கு ஒருவர் நீக்க வேண்டுமென நீதிபதியால் உத்தரவு  பிறப்பிக்கப்பட்டது. கடமை முடிந்து செல்லும்போதும் வீதியில் நிற்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. தற்போது கடந்த நான்கு தினங்களாக நீதிபதி வருவதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன் நகர பகுதியில் போலீசார்  பாதுகாப்பில் ஈடுபடுகிறார்கள். போலீஸ் நிலையத்தில் போதிய போலீசார் இல்லை என்றும்  முறைப்பாடு பதிவு செய்ய வரும் பொதுமக்கள் காவல் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நீதிபதியின் நடவடிக்கையினால்   பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையூறாக உள்ளது. இலங்கையின் சட்டதிட்டங்களில்  நீதிபதிக்குஒரு சட்டம் பொதுமக்களுக்கு ஒரு சட்டமா என பொதுமக்கள் விசனம் கொள்கின்றார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்