Sat. May 11th, 2024

மகளிர் பாடசாலைகளில் ஆரம்ப பிரிவில் ஆண் மாணவர்களை இணைப்பதை தவிருங்கள் – அதிபர்கள்

மகளிர் கற்கும் பாடசாலைகளில் ஆரம்ப பிரிவுகளில் ஆண் மாணவர்களை இணைத்துக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அதிபர்கள் சிலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அச்சுவேலி பகுதியில் இயங்கும் புனித தெரேசாள் மகளிர் கல்லூரி ஆரம்ப பிரிவில் ஆண் மாணவர்களையும் இணைத்தே கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதனால் அரம்ப பிரிவு மாணவர்களை கொண்டு இயங்கும் அச்சுவேலி ஆரம்ப பாடசாலை, சரஸ்வதி வித்தியாலயம், பத்தமேனி இரத்தினேஸ்வரி வித்தியாலயம்,  வளலாய் அ.மி.த.க. பாடசாலை, கதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயம், நவக்கிரி அ.த.க. பாடசாலை, இடைக்காடு மகா வித்தியாலயம் போன்றன மாணவர்கள் எண்ணிக்கையை காட்டுவதில் இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர். அச்சுவேலி  பகுதியில் இருந்து யாழ் நகர்ப்புற பகுதியை நோக்கி மாணவர்கள் சென்று கொண்டிருக்கையில் கிராம புறங்களிலும் மாணவர்களின் எண்ணிக்கைகள், கிராம சேவர் பிரிவுகளை கருத்தில் கொள்ளாது விடுதல், மகளிர் கல்லூரிகளில் ஆண் மாணவர்களை இணைத்துக் கொள்ளல் போன்ற செயற்பாடுகளால் பல பாடசாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிபர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். எனவே கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் இது தொடர்பாக கவனமெடுத்தால் பல பாடசாலைகள் மூடப்படுவதை தவிர்க்க முடியும். ஒரு பாடசாலை மூடப்படுவது பல குற்றவாளிகளை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்