Sat. May 11th, 2024

அத்தியார் இ.க. மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு

கோப்பாய் பிரிவுக்குட்பட்ட நீர்வேலி அத்தியர் இந்துக்கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான காலணி மற்றும் காலுறை போன்றவற்றை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் கரவெட்டிப் பிரிவினரால் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அத்தியர் இந்துக்கல்லூரியில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கே காலணிகளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் கரவெட்டிப் பிரிவினர் வழங்கி வைத்துள்ளனர்.
ஆண்களில் 40 மாணவர்களுக்கும்,  பெண்களில் 11 மாணவர்களுக்குமாக  மொத்தமாக 51 மாணவர்களுக்கு காலணி மற்றும் அதற்கான காலுறைகளும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கை செஞ்சிலுவைச் சங்க தேசியத்தின் தலைவர் க.பாலகிருஷ்ணன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். இவர் தலைமை பெறுப்பேற்று பங்குபெறும் முதலாவது செயற்திட்ட நிகழ்வு இதுவாகும். அத்துடன் சிறப்பு விருந்தினராக கனகம்மா அறக்கட்டளையின் தலைவர் க. குமரேசன் (லண்டன்) அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.  இந்நிகழ்வில் கோப்பாய்  மற்றும் கரவெட்டி பிரிவு தொண்டர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்