Sun. Apr 28th, 2024

போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு மைக்கல் நேசக்கரம் ஊடாக ரூபா 71,200 வழங்கி வைப்பு

முல்லைத்தீவு றெட்பானா விசுவமடுவில் வசித்து வருபவர் சு.காளியம்மா. இவரது கணவர் பெப்ரவரி மாதம் நோய் காரணமாக இறந்துள்ளார்.

இவர்களுக்கு 04 பிள்ளைகள் . அவர்களில் மூவர் தரம் 11, 9, 5 இல் கல்வி கற்கிறார்கள். மூத்த பெண்பிள்ளை கடந்த 03 மாதங்களாக காமன்ஸ்ற்கு சென்று வருகிறார். அதிலிருந்து கிடைக்கும் வருமானமே அவர்கள் அனைவரதும் வாழ்க்கைச்செலவு கல்விச்செலவு மற்றும் தாயாரின் மருத்துவ செலவிற்கு பயன்படுகிறது.

தாயார்  கடந்த சில காலங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். கணவரின் நோய் மற்றும் இறப்பு காரணமாக தனது புற்றுநோய் தொடர்பில் கவனம் செலுத்தாது மருந்துகள் உட்கொள்ளாமல் இருந்துள்ளார். தற்போது அவரது நிலை மோசமாக உள்ளதால் வாராந்தம் சிகிச்சைக்காக தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு சென்று வருகிறார்.

தந்தையை இழந்தும் தாயாரின் கொடிய நோய் காரணமாகவும் பிள்ளைகள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகியுள்ளனர்.அத்துடன் அடிப்படை செலவுகளுடன் தாயாரின் மருத்துவ செலவுகளை ஈடுசெய்ய முடியாது துன்பப்படுகின்றனர். எனவே நல்லுள்ளங்கள் இக்குடும்பத்திற்கு உதவி புரியுமாறு கோரியிருந்தனர் அதற்கு அமைவாக கனடா நாட்டில் வாழ்ந்து வரும் மதியழகன் சுபாசினி குடும்பம் வழங்கிய நிதியில் இருந்து ரூபா 26200 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11-00 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டது

இரு கண் பார்வையும் இழந்த நிலையில் தந்தை வறுமையில் வாடும் குடும்பம் மூன்று பிள்ளைகளில் கல்விக்கு உதவி கோரல்

விசுவமடு தேராவில் பகுதியில் வசித்துவரும் மாணிக்கம் கருணதாஸ் என்பவரின் குடும்பம் 5 அங்கத்தவர்களை கொண்டது

1996 ம் ஆண்டு திருமணம் செய்து தற்போது மூன்று பெண் பிள்ளைகள் வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் இராணுவ நடவெடிக்கையில் இவரது குடும்பம் பல இடங்களில் வசித்து வட்டுவாகல் ஊடாக இராணுவ கட்டுப் பாட்டிற்குள் சென்று அங்கு இராமநாதன் முகாமில் இருந்து அங்கிருந்து மீளக்குடியமர்தத்தின் பின்னர் மீளவும் தமது சொந்த இடத்தில் வசித்துவருகின்றர்கள்

கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்த வேலை தீடிர் என்று சுகயீனம் ஏற்பட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் வைத்தியர்கள் சோதனை செய்ததில் இவரின் மூலையில் கட்டி உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டு ஒப்பறெசன் செய்தனர்

அதன் காரணமாக இரு கண்களும் முற்றாக பார்வை இழந்துள்ளார் கூலி.வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தவர் தற்போது எந்த வருமானமும் இன்றி பிள்ளைகளின் கல்வி செலவுக்கு பெரும் துயரங்களை எதிர் கொண்டு வருகின்றது

மாணிக்கம் கருணதாஸ் குடும்பம் இவரின் மூத்த மகள்கருணதாஸ் கஜானி தரம் 11 இல் கல்வி கற்று வருகின்றார் இரண்டாவது மகள் சஜீபா தரம் 9 கடைசி மகள் தமிழ்விழி தரம் 7 இல் கல்வி கற்று வருகின்றார்கள் ஒரு தொழிலும் செய்ய இயலாது வீட்டில் படுத்த படுக்கையில் படுத்திருக்கும் இவரின் குடும்ப நிலையை உணர்த்து பிள்ளைகளில் கல்வி செலவுக்கும் வாழ்வாதார உதவிகளை செய்து தருமாறு கோரியுள்ளார் கருணையுள்ளம் கொண்டவர்கள் உங்களினால் முடிந்த உதவிகளை செய்யுமாறு கோரியிருந்தனர் அதற்கு அமைவாக சுவிட்சர்லாந்து நாட்டில் வாழ்ந்துவரும் கணேஸ்வரன் நளினி குடும்பம் மற்றும் எஸ் – சஞ்சீவன் ஆகியோர் வழங்கிய நிதியில் இருந்து ரூபா 25,000 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11-00 மணியளவில்வழங்கி வைக்கப்பட்டது

வடமராட்சி பிரதேசத்தை சேர்ந்த கிருஷ்ணகோபால் கௌதமன் யா / நெல்லியடி மத்திய கல்லூரி மாணவன் விளையாட்டுத்துறையில் தேசிய கபடி அணியில் இடம்பிடித்தள்ளார் அவரின் குடும்ப சூழ்நிலை காரணமாக பல தேவைகளை நிறைவு செய்யமுடியாமல் உள்ளர் அவரின் கல்விக்கும்விளையாட்டுத்துறையை மேன்படுத்த முதல் கட்டமாக சுவிட்சர்லாந்து நாட்டில் வாழ்ந்துவரும் செல்வி அச்சிகா கௌதமன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு இன்றாகும் அவரின் குடும்பம் வழங்கிய நிதியில் இருந்து ரூபா 20,000 வழங்கி வைக்கப்பட்டது

 

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்