Sat. May 11th, 2024

பதவியை துறந்தாா் அம்பிகா சற்குருநாதன்! தோ்தலில் களமிறங்குகிறாராம்.

இலங்கை மனித உாிமை ஆணைக்குழுவின் உறுப்பினா் செல்வி அம்பிகா சற்குருநாதன் பதவியை இராஜினா மா செய்திருக்கின்றாா்.

ஆணையாளர்கள் மூவரில் ஒருவராக நியமிக்கப்பட்ட அவருக்கான நியமனத்தை அரசியலமைப்புச் சபையின் பரிந்துரையுடன் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிபால வழங்கிவைத்தார்.

மட்டக்களப்பைத் தளமாகக் கொண்ட சூரிய பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் ஆளுநர் சபையின் உறுப்பினராகவும் அம்பிகா சற்குணநாதன் உள்ளார்.

மூத்த சட்டவாளர் நீலம் திருச்செல்வம் நிதியத்தின் தலைவராகவும் சர்வதேச பெண்ணிய அமைப்பான அவசர செயற்பாட்டு நிதியத்தின் (Urgent Action Fund) ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான உப தலைவராகவும் அ

வர் செயற்பட்டுள்ளார். பால்நிலை ஒருங்கமைப்பும் மற்றும் மதிப்பீடு என்ற விடயத்துக்கான ஐ.நாவின் வதிவிட இணைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

பால்நிலையும் முரண்பாடுகளுக்குமான ஒக்ஸ்போட் கையேடு, சமகால தென்னாசியா, நிலைமாறுகால நீதிக்கான ஆய்வுக்கான சஞ்சிகை,

தென்னாசியாவில் மனித உரிமைகளுக்கான ரௌட்லெட்ஜ் கையேட்டிலும் இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ஐ.நா. மனித உரிமைகளுக்கான தூதுவருக்கும்

மனித உரிமைகளுக்கான மூத்த ஆலோசகர் அலுவலகத்துக்கும் சட்ட ஆலோசகராக அம்பிகா சற்குணநாதன் பணியாற்றியுள்ளார்.

இதேவேளை பதவியை இராஜினாமா செய்ததன் பின்னா் தற்போது அவா் யாழ்.மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் சாா்பில் நாடாளுமன்ற தோ்தலிலும் போட்டியிடவுள்ளாா்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்