Sat. May 11th, 2024

இரா.சம்மந்தன் திருகோணமலையில் களமிறங்குகிறாா்! பட்டியல் தயாா்.

நாடாளுமன்ற தோ்தலுக்கான தமிழரசு கட்சியின் யாழ்ப்பாம், வன்னி தோ்தல் மாவட்டங்களுக்கான வேட்பாளா் பட்டியல் பூா்த்தி செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண பட்டியல் 12ம் திகதி பூா்த்தி செய்யப்படவுள்ளது.

ஏப்பிரல் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் தமிழ் அரசுக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களிற்காக

உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான கலந்துரையாடல் கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானங்கள் எட்டப்பட்டன. இதில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் அரசுகட்சி

சார்பில் தற்போதுள்ள நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சோ.சேனாதிராயா , எம்.ஏ.சுமந்திரன் , சி.சிறிதரன், ஈ.சரவணபவனுடன் தபேந்திரன், ரவிராஜ்- சசிகலா,

அம்பிகா ஆகியோருடன், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வன்னி மாவட்டத்திலே இ.சாள்ஸ் நிர.மலநாதன், சாந்தி சிறீஸ்காந்தராஜா, சிவமோகன் ஆகியோருடன் மருத்துவா் ப.சத்தியலிங்கம்

ஆகியோர் தேர்வு செய்யப்பட்டதோடு திருகோணமலை மாவட்டத.திலே இரா.சம்பந்தன் , துரைரட்ணம் , குகதாசன், சரா.புவனேஸ்வரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டதோடு

எஞ்சியோர் தேர்வு செய்ப்படவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. மேலும் யாழ்ப்பாணம் மற்றும் வன்னியில் போட்டியிட விரும்பி விண்ணப்பித்தோரின் விபரங்களும் ஆராயப்பட்ட நிலையில்

வழங்க முடியாத சூழலில் நிராகரிக்கப்பட்டது. இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் யோகேஸ்வரன் , சிறீநேசன் ஆகியோருடன் மேலும் மூவரென தீர்மானித்த நிலையில் வடக்கு மாகாணம்

முழுமை செய்யப்பட்டது. இருப்பினும் குழக்கு மாகாணம் 12ம் திகதி கூடி முடிவு செய்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

இதேநேரம் கொழும்பு மாவட்டத்தில் இம்முறை போட்டியிடுவதில்லை எனத் தீர்மானித்துள்ளதோடு அதற்காக தவராசாவின் பெயர் வெகுமதி ஆசனப் பட்டியலில் முன்னுரிமைப் படுத்துவதாகவும்

திருகோணமலையின் தற்போதைய நிலை கருதி அந்த மாவட்டத்திற்கும் ஓர் வெகுமதி ஆசணம் வழங்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்