Sat. Apr 27th, 2024

நெல்லியடி முச்சக்கர வண்டிகளுக்கு புதிய நடைமுறைகள்

எதிர்வரும் 1ம்திகதி முதல் நெல்லியடியில் உள்ள அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் புதிய நடைமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

கரவெட்டி பிரதேச சபைத் தவிசாளர் ஐங்கரன் அவர்களின் தலைமையில் நேற்று கரவெட்டி பிரதேச சபை மண்டபத்தில்  நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இந்நடைமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் நெல்லியடி பொலீஸ் பொறுப்பதிகாரி காஞ்சன விமலவீர, நெல்லியடி போக்குவரத்து பொலீஸ் பொறுப்பதிகாரி சரத், புலனாய்வுத்துறை பிரிவு அதிகாரி தென்னரசு, கரவெட்டி பிரதேச செயலாளர் தயாரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் எதிர்வரும் 1ம்திகதி முதல் 1.முச்சக்கர வண்டிகள் அனைத்தும் மீற்றர் பொருத்தப்பட வேண்டும்,  2.சீருடை அணிதல் வேண்டும், 3.அரைக் காற்சட்டை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது.
4.நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் முச்சக்கர வண்டியில் சாரதி தவிர்ந்த வேறு எவரும் இருப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
5.பொது இடங்களில் தகாத வார்த்தைகள் பிரயோகிப்பதற்கு தடை
6.சிகையலங்காரம் நன்னடத்தைக்கு உரியதாக இருத்தல் வேண்டும் என பல விடயங்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதனை மேற்பார்வை செய்து நெல்லியடி முச்சக்கர வண்டிகளுக்கு பிரதேச சபையால்  ஸ்ரிக்கர் ஒட்டப்பட்டு அனுமதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்