Thu. May 2nd, 2024

நடேசலிங்கம் பிரியகுடும்பத்துக்காக 30 மில்லியன் செலவு செய்த ஆஸ்திரேலிய அரசு

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த நடேசலிங்கம் பிரியா குடும்பத்துக்காக , அந்தநாட்டின் அரசாங்கம் இதுவரை 30 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை செலவிட்டுள்ளது. அவர்களுக்காக கிறிஸ்மஸ் தீவில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்தநிலையில் முகாமின் பராமரிப்புக்காக நாளாந்தம் 20 ஆயிரம் அவுஸ்திரேலிய டொலர்கள் செலவிடப்படுவதாக தெரியவருகிறது . அவுஸ்திரேலிய நாடாளுமன்றில், க்றீன்ஸ் கட்சியின் செனட் உறுப்பினர் நிக் மெக்கிம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார். சட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலிய செல்கின்ற அகதிகளை தடுத்துவைப்பதற்காக முன்னர் பயன்படுத்தப்பட்டு வந்த க்றிஸ்மஸ் அகதிகள் முகாம், கடந்த ஏப்ரல் மாதம் மீளத் திறக்கப்பட்டது. அண்மையில் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்த இலங்கையைச் சேர்ந்த நடேசலிங்கம் பிரியா குடும்பத்தை சேர்ந்த நால்வர் மாத்திரமே தற்போது அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களது வழக்கு விசாரணை நிறைவடையும் வரையில் அங்கு தங்கவைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் முகாம் மீளத்திறக்கப்பட்டது அவர்களை மாத்திரம் தடுத்துவைப்பதற்காக அல்லவென அவர் மேலும் கூறினார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்