Wed. May 8th, 2024

நகரசபை புதிய தவிசாளர் தெரிவு எதிர்வரும் 10ம் திகதி

பருத்தித்துறை நகரசபை புதிய தவிசாளர் தெரிவு எதிர்வரும் 10ம் திகதி நடைபெறவுள்ளது.
பருத்தித்துறை நகரசபை முதலாவது பட்ஜெட் தோற்கடிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது பட்ஜெட் வாசிக்கபடவுள்ள நாளன்று தவிசாளர் இராஜினாமா செய்தார். இதனால் தவிசாளர் வெற்றிடம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 27ம் திகதி புதிய தவிசாளர் தெரிவுகாக உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் எதிர்ப்பு காரணமாக கோரம் இல்லாமல் அன்றைய தவிசாளர் தெரிவு 14நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் புதிய தவிசாளர் தெரிவு எதிர்வரும் 10ம் திகதி இடம் பெறவுள்ளது.
 மீண்டும் கூட்டமைப்பு ஆட்சியை கைபற்ற பல முனைகளில் நகர்த்தல்களை செய்கிறது. ஆனால் நகரசபையில் பெரும்பான்மையாக காணப்படும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியை ஆட்சி அமைக்க ஆதரவு வழங்க மறுத்து வருகிறது. கூட்டமைப்பின் ஆட்சியில் கடந்த 5வருடங்களாக மக்கள் நலன்சார் திட்டங்கள் எதுவும் இடம்பெறாதவுடன் பல மோசடிகள் இடம்பெற்றாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
எதிர்வரும் 10ம் திகதி தவிசாளர் தெரிவு இடம்பெற கோரம் காணப்படாது விடின் சபை கலைக்கப்படலாம்..
   5வருடங்கள் ஆட்சி செய்த கூட்டமைப்பு இன்னும் மீதி 3மாதகாலம் தமிழ்தேசிய மக்கள் முன்னனி ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்து மக்கள் நலன்கருதி சபை கலைக்கப்படாமல் செயற்படுவதுடன் அவர்களின் ஆட்சியின் செயற்பாடுகளை அறிய மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் ஏனவும் நகரசபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்…
   மீண்டும் சபையை கூட்டமைப்பு கைப்பற்றும் நிலையில் போட்டி இட்டால் கோரம் இல்லாமல் சபை கலைக்கப்படும். அல்லது மீண்டும் பாதீடு தோற்கடிக்கப்பட்டு சபை கலையும். ஏன்எனில் 2தடவைக்கு மேல் தவிசாளர் தெரிவு இடம்பெறாது…
மக்கள் நலன்களில் அக்கறை கொண்ட கட்சிகள் முடிவுகள் விரைவில் மக்களுக்கு தெரியப்படுத்தப்படும்.. அதற்கு முதல் எதிர்வரும் 10ம்திகதி முன் உள்ளூராட்சி சபைகள் அரசாங்கத்தால் கலைக்கப்படலாம்…

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்