Thu. May 2nd, 2024

தோப்புக்கரணம் போடவைத்த இரு போலீஸ் அதிகாரிகளும் மீண்டும் சேவையில்

கொழும்பில் ஊரடங்கு உத்தரவை மீறிய பல நபர்களை தண்டித்த இரு காவல்துறை அதிகாரிகளும் தற்பொழுது மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

மார்ச் 12 ம் தேதி மருதானை டார்லி வீதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய நான்கு பேரை இரண்டு காவல்துறை அதிகாரிகள் தோப்புக்கரணம் போடுமாறு தண்டித்திருந்தனர் .

இதை அறிந்த காவல்துறை தலைமையகம் ஒரு போலீஸ் சார்ஜென்ட் மற்றும் ஒரு கான்ஸ்டபிள்களை தற்காலிகமாக பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்ததுடன் இரண்டு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்படும் என்றும் தெரிவித்தது .

இருப்பினும், இடைநீக்கம் செய்யப்பட்ட சார்ஜென்ட் மற்றும் கான்ஸ்டபிள் மீண்டும் சேவையில் சேர்க்கப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி அஜித் ரோஹானா இன்று தெரிவித்தார்.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் நாட்டின் இதரப்பகுதிகளிலும் பொலிஸார் தடியால் பொதுமக்களை தங்கியிருந்தார்கள் என்று ஊடகங்களில் செய்திவெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்