Wed. May 8th, 2024

தேசிய மட்ட எறிபந்தாட்டத்தில் கனகராயன்கும் ம.வி. வெள்ளிப் பதக்கம்

அ‌கில இலங்கைப் பாடசாலைகள் எறிபந்தாட சங்கம் நடாத்திய தேசிய மட்ட எறிபந்தாட போட்டியில் வவுனியா கனகராயன்குளம் மகா வித்தியாலய அணி வெள்ளிப் பதக்கத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

இலங்கைப் பாடசாலைகள் எறிபந்தாட சங்கம் நடாத்திய சி பிரிவினருக்கான தேசிய மட்ட எறிபந்தாட போட்டிகள் இரத்தினபுர கொகலியகொட தர்மபால வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் கனகராயன்குளம் மகா வித்தியாலய அணியை எதிர்த்து பொம்போகல தர்ம போக வித்தியாலய அணி மோதியது.
முதலாவது செற்றில் தமது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கனகராயன்குளம் மகா வித்தியாலய அணி 25:11 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் அடுத்த இரண்டு செற்களிலும் 18:25, 17:25 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்