Sat. May 4th, 2024

தென்மராட்சி பிரதேசத்தில் ஊரடங்கு நேரத்தில் அமோகமாக இடம்பெறும் சட்டவிரோத செயல்பாடுகள்

தென்மராட்சி பிரதேசத்தில் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் சட்ட விரோதமாக வீடுகள், பற்றைகளுக்குள் வைத்து கள் ,கசிப்பு, கஞ்சா என்பவற்றின் விற்பனை அமோகமாக இடம் பெறுவதாக பொதுமக்கள் பலரும் முறைப்பாடளிக்கின்றனர். இதனால் குடும்பங்களினுள் சண்டை, சச்சரவுகள் அதிகரித்து செல்வதுடன்  குடும்ப பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார்.

புகைத்தல் உள்ளிட்ட போதைப்பொருள் பாவனை கொரோனா தொற்றை அதிகரிக்கும் என்று சுகாதாரத்துறை சார்ந்த அதிகாரிகளினால் தொடர்ச்சியாக எச்சரிக்கை வழங்கப்படுகின்ற போதிலும் அதனை கவனத்தில் கொள்ளாமல் தொழில்கள் முடங்கி வருமானம் இல்லாத இவ்வேளையில் கையில் இருக்கும் சொற்ப பணத்தையும் வயது வேறுபாடின்றி ஆண்கள் போதைப் பொருளுக்காக செலவழிப்பது கவலைக்குரிய நிலையாக காணப்படுவதுடன் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டிய ஒன்றாகவும் காணப்படுகின்றது.

எனவே எமது பிரதேசங்களில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறும்போது அதுபற்றி பொதுமக்கள் தாமாக முன்வந்து 119 என்ற பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது உங்கள் பகுதி பொலிஸ் நிலையத்திற்கு தகவல்களை வழங்குமாறு சாவகச்சேரி சுகாதார பிரிவினர் பொதுமக்களிற்கு அறிவுறுத்தியுள்ளனர்.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்