Mon. Apr 29th, 2024

திரைமறைவில் கோத்தபாயவை அமெரிக்கா ஆதரித்தா ?

கோத்தபாய ராஜபக்சவும் அமெரிக்காவும் பரஸ்பரம் தேர்தல் காலத்தில் மென்போக்கை கடைபிடித்திருந்தனர். இந்த நிலையில் கோத்தபாய தொடர்பில் அமெரிக்கா ஏற்கனவே நல்ல தொடர்பை பேணிவருவதுடன், குடியுரிமை தொடர்பான அவரின் சிக்கலை உடனடியாக தீர்த்ததுடன் , அவர் தொடர்ப்பாக வெளியான பொய்யான வீடியோவுக்கு உடனடி மறுப்பறிக்கை வெளியிட்டிருந்தது. கோத்தபாய ராஜபக்சவும் அமெரிக்காவுக்கு எதிராக எந்தவித கருத்துக்களையும் தனது தேர்தல் பிரச்சார காலத்தில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் திரைமறைவில் கோத்தபாய ராஜபக்சவை அமெரிக்கா ஆதரித்ததாகவே தெரியவருகிறது.
அண்மையில் அமைச்சர் மங்கள சமரவீர CMC தொடர்பான உடன்படிக்கை கையெழுத்திடுவது குறித்து அவசரம் காட்டியபொழுது, மற்றைய எதிர்க்கட்சியினர் எதிர்த்தபோதும் கோத்தபாய அதுதொடர்பாக எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.
அமெரிக்காவும் உடனடியாக தேர்தலுக்கு பின்னரே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிவித்தது. இதன் மூலம் இந்த ஒப்பந்தம் எப்படியும் கைச்சாத்தாகும் என்ற தொனிப்படவே அமெரிக்காவின் அறிக்கை அமைந்திருந்தது. அணைத்து கருத்து கணிப்புகளும் கோத்தவே வெல்லுவார் என்று தெரிவித்திருந்த நிலையில் அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு கோத்தபாய மீதான அவர்களின் நம்பிக்கையையே காட்டுகிறது
ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டபோதிலும் அணைத்து வழக்குகளும் குறைந்த காலத்திலேயே தள்ளுபடி செய்யப்பட்டிருந்ததுடன் அவரின் குடியுரிமை தொடர்பான ஆவணமும் 2 வாரத்தில் அவரின் கைக்கு வந்துள்ளது.
அமெரிக்கா குடிவரவு திணைக்கள தகவலின் படி இந்த ஆவணம் கைக்கு வந்துசேர பல மாதங்கள் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
சீனாவின் இலங்கை மீதான ஆதிக்கத்தை தடுக்கவும் இலங்கையில் செல்வாக்கு செலுத்தும் நோக்கிலேயே திரைமறைவில் கோத்தபாயவுடன் அமெரிக்கா சில நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவே தெரிகிறது.

இதுவரையில் இந்தியா அமெரிக்கா பாக்கிஸ்தான் மற்றும் மாலைதீவு போன்ற நாடுகள் கோத்தபாயவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த போதிலும் இதுவரை சீனா வாழ்த்து அனுப்பியதாக மீடியாக்களில் இன்னமும் செய்திகள் வரவில்லை. கடந்த முறை அரசியல் சூழ்ச்சியின் மூலம் பிரதமரான மஹிந்த ராஜபக்சவுக்கு உடனடியாக முதல் ஆளாக வாழ்த்து கூறிய சீனா இன்னமும் கோதாவுக்கு வாழ்த்து சொல்லாதது ஆச்சரியமாகவே உள்ளது. இதன் மூலம் சீனா இந்த ரகசிய உடன்படிக்கையை மோப்பம் பிடித்திருக்கலாம் என்றே தோன்றுகிறது

எதிர்வரும் நாட்களில் நாட்களில் கோத்தபாய ராஜபக்ச எடுக்கப்போகும் நடவடிக்கைகளில் இது வெளிப்படையாக தெரியவரலாம். அதுவரை இது ஒரு ஊகமாகவே இருக்கட்டும்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்