Sat. May 4th, 2024

திருமண சட்டத்தில் வருகினறது திருத்தம்!! -கலக்கத்தில் முஸ்லீம்கள்-

நாட்டில் வாழும் சகல இனங்களுக்குமான திருமண சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டத் திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட எம்.பி துசிதா விஜயமான்ன முன்வைத்துள்ளார்.

நாட்டில் வாழும் எந்த இன, மதத்தவராக இருந்தாலும் ஆகக்குறைந்த திருமணமாகும் வயதெல்லை 18 ஆகும். இந்த வயதெல்லையை தாண்டாத எவருக்கும் திருமணம் செய்வதோ அல்லது செய்து வைப்பதோ குற்றமாகும்.

அவ்வாறான திருமணங்கள் இனிவரும் காலங்களில் செல்லுபடியற்றதாக கருதப்படும். குறித்த வயதெல்லையை தாண்டாத எவரையும் திருமண பந்தத்தில் இணைய உதவி புரிவோரோ அல்லது கட்டாயப்படுத்துபவர்கள் குறித்து கடும் நடவடிக்கை எடுக்க புதிய சட்டத்தில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கந்த உடரட்ட திருமணம் (மத்திய மலை நாட்டு திருமணம் ) இஸ்லாம் சட்டதிற்கு அமைய முஸ்லீம் மக்கள் செய்யும் திருமணங்கள் அனைத்து இந்த சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும்.

அவ்வாறு செய்து வைக்கப்படும் திருமணங்கள் அனைத்தும் செல்லுபடியற்றவை என கருதப்படும். இதனை மீறி திருமணம் செய்து வைக்கப்படுமாயின் அதுகுறித்து அதிக பட்ச சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்