Sat. May 11th, 2024

கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி அரையிறுதியாட்டத்திற்குத் தகுதி. 

கொற்றாவத்தை சிவானந்தா விளையாட்டு கழகம்  நடாத்தும் பருத்தித்துறை லீக் மற்றும் வடமராட்சி லீக் அணிகளுக்கிடையிலான அணிக்கு 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இன்றைய சுப்பர் 8 ஆட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி அபார வெற்றி பெற்று அரையிறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை குறித்த கழக மைதானத்தில்  நடைபெற்ற ஆட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணியை எதிர்த்து வதிரி டயமன்ஸ் அணி மோதியது. இரு அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் ஆரம்பம் முதலே ஆட்டத்தின் எதிர்பார்ப்பு மேலோங்கியது .அதற்கேற்றாற் போல ஆட்டம் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் காணப்பட்டது .இரு அணிகளும் மாறி மாறி கோல் பரப்பை ஆக்கிரமித்து .ஆட்டத்தின் 10 வது நிமிடத்தில் ஆர்த்திகன் தனது அணிக்கான சிறப்பானதொரு கோலை பெற்று ஆட்டத்தை முன்னிலைப்படுத்தினர் . கோல் பெறப்பட்டதும் ஆட்டமானது மேலும் விறுவிறுப்படைந்தது . மேலதிக கோல்களின்றி முடிவடைந்தது முதல் பாதியாட்டம். இரண்டாம் பாதியாட்டத்தின் ஆரம்பத்தில் இரு அணிகளும் தங்களுடைய ஆட்டத்தின் வியூகங்களை மாற்றியமைத்து ஆடத் தொடங்கினர். ஆட்டத்தின் போக்கில் இரு அணிகளும் கோல்களை பெறுவதற்கான முயற்சிகள் கோல் காப்பாளர்களால் முறியடிக்கப்பட்டது .ஆட்டத்தின் 36 வது நிமிடத்தில் றேஞ்சஸ் அணிக்கு கிடைத்த நேருதையினை சுஜாஸ்கான் சிறப்பான முறையில் நேராக கோலாக மாற்ற 2:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது நமது அணி .ஆட்டத்தின் 38 வது நிமிடத்தில் டயமன்ஸ் அணி தமது முதலாவது கோலை பெற்று கொண்டது .டயமன்ஸ் அணியினர் கோல் பெற்றதும் ஆட்டத்தின் வேகம் மேலும் அதிகரித்தது. தொடர்ந்த ஆட்டத்தில் 46 வது நிமிடத்தில் வர்மன் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி தனது அணிக்கான 3 வது கோலை பெற்றுக் கொள்ள ஆட்ட நேர முடிவில் 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி  அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆட்ட நாயகனாக கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி வீரர்  வர்மன் தெரிவு செய்யப்பட்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்