Sat. Apr 27th, 2024

கைதடியில் நூதனமான திருட்டு முயற்சி

யாழ்.கைதடியில் கடத்தப்பட்ட ஹயஸ் ரக வாகனம் மீசாலை வேம்பிராய் பொது மயானத்துக்கு அருகாமையில் நேற்று  திங்கட்கிழமை அநாதரவான நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்.கைதடி மேற்கில் விற்பனைக்காக விடப்பட்டிருந்த ஹயஸ் வாகனத்தை நேற்று முன்தினம் பார்வையிட வந்த நபர்கள் அதனை ஓடிப் பார்ப்பதாக கூறிக் கடத்திச் சென்றுள்ளனர்.

குறித்த வாகனம் விற்கப்படவுள்ளதாக தரகரிடம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சையிக்கிளில் வந்த இருவர் வாகனத்தை பார்த்து விட்டு அதனை ஓட்டிப் பார்க்க வேண்டும் எனக் கூறி, ஒருவர் உரிமையாளருடன் நிற்க மற்றவர், கைதடி பிள்ளையார் வரைக்கும் வானத்தை கொண்டு செல்வதாக கூறி வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளார். அதன் பின்னர் உரிமையாளருடன் நின்ற மற்றவர்,  கைத் தொலைபேசிக்கு மீள் நிரப்ப வேண்டும் எனக் கூறி கடைக்கு செல்ல முற்பட்ட போது, உரிமையாளரும் கூடச் சென்றுள்ளார். கடைக்கு முன்பாக மோட்டார் சையிக்கிளை நிறுத்தி 100 பணத்தைக் கொடுத்து மீள் நிரப்பு அட்டையை வாங்கி வருமாறு கூற, உரிமையாளர் கடைக்கு செல்ல மற்றவரும் தப்பியோடிள்ளார்.

தனது வாகனம் களவாடப்பட்டமையை உணர்ந்த உரிமையாளர் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த ஹயஸ் வாகனம் மீசாலை வேம்பிராய் பொது மயானத்திற்கு அருகாமையில் இலக்கத் தகடுகள் அகற்றப்பட்டு, அநாதரவாக காணப்பட்ட நிலையில் நேற்று மீட்க்கப்பட்டுள்ளது.

வாகனத்தை கடத்தி சென்றவர்கள் ஏதேனும் குற்றச்செயலில் ஈடுபட்டனரா என பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்