Sun. May 12th, 2024

கரவெட்டி விக்னேஸ்வரவில் பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வு

யாழ். விக்னேஸ்வரா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை 2 மணி அளவில் விக்னேஸ்வரா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.  வை. செல்வராஜா பழைய மாணவர் சங்கம் ஓய்வுநிலை மாகாண கல்வி பணிப்பாளர் வடமாகாணம் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. பிரதம விருந்தினராக  சி. ஜெய ஆனந்தன் விரிவுரையாளர் இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் மற்றும் கௌரவ விருந்தினராக பொ. அரவிந்தன் அதிபர்கள் விக்னேஸ்வரா கல்லூரி கரவெட்டி,   சிறப்பு விருந்தினர்களாக  ம.சிவாஜி, அபிவிருத்தி உத்தியோகத்தர் கமநல அபிவிருத்தி திணைக்களம்,  செல்வி ம.வேணு ரேகா பழைய மாணவி ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள். வெற்றியீட்டிய பழைய மாணவர்களுக்கு பெறுமதியான தங்கப்பதக்கமும் கேடயன்களும்  வழங்கப்பட்டது. பழைய மாணவர்களின் விளையாட்டு துறையை அபிவிருத்தி செய்வதற்காக பிரதம விருந்தினர் பழைய மாணவர் சங்கத்திற்கு  50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை இந்த நிகழ்வின் போது வழங்கி உள்ளார்

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்