Thu. May 2nd, 2024

ஏப்ரல் மாத ராசி பலன் 2020: ரிஷபம்

ரிஷபம் ராசியில் சுக்கிரன் ஆட்சி பெற்றிருக்கிறார். லாப ஸ்தானம் விரைய ஸ்தானத்தில் சூரியன், குடும்ப ஸ்தானத்தில் ராகு, அஷ்டம ஸ்தானத்தில் கேது, பாக்ய ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சனி லாப ஸ்தானத்தில் புதன் நீசம் என கிரகங்கள் இந்த மாதம் சஞ்சரிக்கின்றன. உங்க ராசிநாதன் சுக்கிரன் உங்களுக்கு சந்தோஷங்களை கொடுக்கப்போகிறார். மாளவியா யோகம் பெற்று சஞ்சரிக்கிறார். குடும்பத்தோடு இணைந்து இருக்கப் போகிறீர்கள். சனியால் ஏற்பட்டு வந்த சங்கடங்கள் தீரும். ஏப்ரல் மாதம் முழுவதும் சுக்கிரன் உங்க ராசியில் இருப்பதால் முகம் பொலிவு கூடும். கலைத்துறைக்கு போக வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த மாதம் முயற்சி செய்யலாம். ஒன்பதாம் வீட்டில் மூன்று கிரகங்கள் கூடி இருப்பது அதிர்ஷ்டம். எதிர்பார்க்காத சம்பவங்கள் நிறைய வரும் தொழில் வியாபாரத்தில் இப்போதைக்கு லாபம் வரவில்லை என்றாலும் நஷ்டம் வராது.

அதிசார குரு பெயர்ச்சியால் ரிஷபம் ராசிக்கு நிறைய நன்மைகள் உண்டு. இந்த மாதம் நோய் பிரச்சினையால் ஊரை விட்டு ஓடிப்போனாலும் நோய் பாதிப்புகள் நீங்கும். உங்க ராசியில் சுக்கிரன் நிற்கிறார். அதே நேரத்தில் உங்க ராசிக்கு நீசபங்க ராஜயோகம் பெற்ற குருவின் பார்வை கிடைப்பதால் நன்மை நடக்கும். எதற்காகவும் பதற்றம் வேண்டாம் உங்களுடைய பணம் பாதுகாப்பாக இருக்கும். கொரோனா வைரஸ் பிரச்சினையால் தொழில் எல்லாம் இப்படி முடங்கிக் போச்சேன்னு வருத்தப்படாதீங்க. ஆரோக்கியமாக இருந்தால் எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் சம்பாதிக்கலாம் முதலில் ஆரோக்கியம்தான் முக்கியம் கவனமாக இருங்கள்.

உங்களுடைய பலம் அதிகரிக்கும் சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். புதன் நீசமடைந்தாலும் உங்களுக்கு கவலையில்லை. சில நாட்களில் இடப்பெயர்ச்சியாகி மேஷம் ராசிக்கு மாறுவதால் சுப விரையம் செய்வீர்கள். எதிர்பார்க்காத வருமானம் வரும். கஷ்டங்கள் தீரும். கடன் நிவர்த்தியாகும். இந்த மாதம் கடவுளின் அருளால் பாதிப்புகள் நீங்கும். வெளிநாட்டு வாய்ப்பு வந்தாலும் ஒத்துக்காதீங்க. வீட்டுக்கு உள்ளேயே இருந்து ஆரோக்கியமாகவும் மன மகிழ்ச்சியோடவும் இருங்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்