Tue. May 7th, 2024

உக்ரைன் பயணிகளை ஏற்றிய சாரதியை தனிமைப்படுத்தலுக்கு உட்பட அறிவுறுத்தல்

யால சரணாலயத்தில் சஃபாரி சாரதிகளாக பணியாற்றிய பலர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திய மோசமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தற்பொழுது உக்ரயினில் இருந்து வந்துள்ள உல்லாசப்பயணிகள் யால சரணாலயத்தில் சஃபாரி சென்றிருந்தார்கள். அவர்கள் சஃபாரி முடிந்து வெளியேறியேறியதும் அணைத்து சாரதிகளையும் 14 நாட்களுக்கு தனிமை படுத்தி கொள்ளுமாறு இராணுவத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் அந்த சாரதிகள் ஆத்திரமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளார்கள். இந்த சஃபாரிக்காக தமக்கு 700 ரூபா பணம் மட்டும் வழங்கப்படுள்ளதுடன் தமக்கு எந்தவித டிப்ஸ் பயணிகளால் வழக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர் .தற்பொழுது எந்தவித உழைப்பும் இல்லாமல் 14 நாட்கள் தனிமைப்படுத்தவேண்டிய நிலைக்கு அரசாங்கம் பணித்துள்ளதாக கருத்து வெளியிட்டுள்ளார்கள்.
இதனை தங்களுக்கு முன் கூட்டியே தெரியப்படுத்தவில்லை என்றும் அவ்வாறு தெரியப்படுத்தி இருப்பின் தங்கள் சபாரிக்கு சென்றிருக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ள அவர்கள் அரசாங்கம் தங்களை ஏமாற்றியுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளார்கள்.
முன்னாள் ரசியாவுக்கான தூதுவர் உதயங்கவே நாட்டுக்குள் சுற்றுலாப்பயணிகளை அழைத்து வந்துள்ளதுடன் அவர்களை வரவேற்க சென்ற அவர் எந்தவித தனிமைப்படுத்தலும் இன்றி வெளியில் தெரிவதாக குற்றசாட்டுகள் உள்ளமையா குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியின் மைத்துனரான அவர் பல்வேறு ஊழல் குற்றச்சாடுகளுக்கு உள்ளாகி ஒழிந்திருந்த நிலையில் புதிய அரசு பதவியேற்றபின்னர் நாடுதிரும்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்