Thu. May 9th, 2024

யாழ். மாவட்டத்தில் டெங்குபாதிப்பு அதிகரிக்க சுகாதார உத்தியோகத்தர்கள் (PHI) தான் காரணமா?

யாழ். மாவட்டத்தில் டெங்குகாய்ச்சலால் பாதிக்கபடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இவ்விடயம் தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியிடம் வினாவியபோது யாழ். மாவட்டத்தில் இந்தவருடம் மாத்திரம் 1991 பேர் டெங்குகாய்ச்சலுக்கு இலக்காகி உள்ளனர். அத்துடன், கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 456 பேர் டெங்குநோயால் பாதிப்படைந்துள்ளனர், கடந்த எட்டு நாட்களில் மாத்திரம் 276 பேர் டெங்குகாய்ச்சல் காரணமாகச் சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

 

 

நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலமே இந்த நோயை கட்டுப்படுத்தலாம். ஆனால் யாழ். மாவட்ட சுகாதார அதிகாரிகளின் (PHI) அசமந்த போக்கே நுளம்பு பெருகுவதற்கும், டெங்கு நோயால் பாதிக்கபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் காரணம் என மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக வடமாரட்ச்சி பகுதியில் நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக செல்லும் உத்தியோகத்தர்கள் மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு மாத்திரமே சென்று அங்கு குப்பைகள் இருந்தாலோ, பாத்திரங்களில் அல்லது நீர் தொட்டிகளில் நீர் தேங்கிஇருந்தாலோ உடனடியாக தண்டப்பணம் செலுத்த வலியறுத்துகிறார்கள். ஆனால் பக்கத்திலிருக்கும் குப்பைகளும் பிளாஸ்டிக் பொருட்களும் இருக்கும் மக்கள் குடியிருக்காத வீடுகளுக்கோ அல்லது ஆளில்லாத வெற்று காணிகளுக்குள்ளோ இவர்கள் நுழைவது இல்லை. இங்கு பெருகும் நுளம்புகளால் அயல்வீடுகளில் உள்ளோர் மட்டுமன்றி அந்த பிரதேசமே பாதிக்கப்படுகின்றது .
இது தொடர்பாக சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தெரியப்படுத்திய பொழுதும் இது தொடர்பாக அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படியான கணிகளையோ அல்லது ஆளில்லா வீடுகளையோ உரிமையாளர்களுக்கு தெரியப்படுத்துவதன் மூலமோ அல்லது அரசாங்கமே பொறுப்பெடுத்து இதனை சுத்தம் செய்வதன் மூலமே இதனை அடியோடு ஒழிக்கமுடியும்.


இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் ஏனோ தானோ என்று பெயருக்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கையில் சுகாதார அதிகாரிகள் ஈடுபடுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கிறார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்