Sat. Apr 27th, 2024

அதிகார பரவலாக்கமே நாட்டிற்கு தேவை!! -பிரித்தானிய எம்.பியிடம் எடுத்துரைத்த சுமந்திரன்-

இலங்கையில் நடக்கும் சிங்கள பேரினவாத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், அதிகார பரவலாக்கம் மாத்திரமே அதற்கு ஒரே வழி என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் மல்க்கம் ப்ருஸ்க்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும் இடையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.

இதன்போதே பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறித்த விடயத் தெரிவித்துள்ளது.

அதிகார பரவலாக்கமானது தமிழ் மக்களின் பிரச்சினைகளை மாத்திரமன்றி, ஏனைய பிரச்சினைகளு;கும் தீர்வுகளை காண வழிவகுக்கும்.

ஒரு புதிய அரசியல் யாப்பு வேண்டும் என இந்த அரசாங்கமும் தெரிவித்துள்ளது. எனவே, இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றினை கண்டு கொள்ளும் வகையில் அந்த புதிய யாப்பு அமைய வேண்டும்.

தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஒன்றுபட்ட பிரிவுபடாத நாடொன்றினுள் அதிகார பரவலாக்கத்திற்கு வாக்களித்து வந்துள்ளார்கள்.

அவர்களது அந்த ஜனநாயக கோரிக்கையை ஆட்சியாளர்கள் மதிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமநதிரன் இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மை மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஒரு தீர்வையே நாம் எதிர்பார்க்கிறோம்

ஆனால், பெரும்பான்மை மக்கள் சரியான திசையில் வழி நடத்தப்பட்ட வேண்டும்.

அதிகார பரவலாக்கத்திற்கான கோரிக்கைகைகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டதன் விளைவாகவே பிரிவினைவாதம் உருவானது.

எனவே, நிரந்தரமான தீர்வொன்றினை காணும் வகையிலும், கடந்த கால சம்பவங்கள் மீள் நிகழாத முறையிலும் முன்னேறி செல்வதற்கு புத்தியுடன் செயற்பட வேண்டியது அவசியமாகும் என்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்