Tue. Jun 28th, 2022

பொங்கலுக்கு மாஸ்டர்

விஜயின் 64வது படமான மாஸ்டர் திரைப்படம் இன்னும் 14 நாட்களில் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி திரைப்படமும், அட்லி இயக்கத்தில் பிகில் திரைப்படமும் 2019ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிடப்பட்டு இரண்டு படங்களுமே சாதனை படைத்தன.
இளைய தளபதி விஜய் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் விஜயின் 64வது படத்திற்கு மாஸ்டர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் விஜய் போதைக்கு அடிமையான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று டீசர் வெளியான பிறகு உறுதி செய்யப்பட்டது.
மாஸ்டர் படத்தில் சில லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
இதில் ஒரு புகைப்படத்தில் தலைக்கேறிய போதையில், மதுவை மிக்சியில் போட்டு கலந்து குடிப்பதான டீசர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இவரின் இசையில் “வாத்தி கம்மிங்” லிட்டில் ஸ்ரோரி என பாடல்கள் வெளியிடப்பட்டு ஹிட்டாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்