பிலிப்பைன்ஸில் இராணுவ விமான விபத்தில் குறைந்தது 17 பேர் பலி

தெற்கு பிலிப்பைன்ஸில் இராணுவ விமான விபத்தில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர், ஆனால் 40 பேர் எரியும் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டனர் .
92 பேருடன் சென்ற இராணுவ போக்குவரத்து விமானம் ஜோலோ தீவில் ஓடுபாதையில் தரையிறங்கியபொழுது இந்த விபத்து இடம்பெற்றது. இறக்கவேண்டிய இடத்தை தாண்டி விமானத்தை தரையிறக்கியதால் ஐந்தே சம்பவம் இடம்பெற்றதாகவும், விமானிகள் விமானத்தை மீண்டும் மேலெழுப்புவதற்கு முயற்சித்த பொழுதும் தேவையான வேகத்தை பெறமுடியாததால் விமானம் கட்டிடங்கள் மற்றும் மரங்கள் நிறைந்த பகுதியில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
தப்பியவர்கள் அருகிலுள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து நடந்த இடத்தில் பதினேழு உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
சி 130 ஹெர்குலஸ் என்ற விமானத்தின் இடிபாடுகளுக்கு மேலே ஒரு பெரிய பந்து போன்று கருப்பு புகை மண்டலம் காணப்பட்டது.
பல கட்டிடங்களுக்கு அருகில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் எரிந்த குப்பைகளைக் காட்டும் இடத்தின் படங்களைஅரச செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது