Sat. Apr 27th, 2024

நீதி கேட்டு பருத்தித்துறை நகர சபைக்கு முன்னால் போராட்டம்

தனக்கு அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்து  பருத்தித்துறையை வீ எம் வீதியை  சேர்ந்த ஒருவர் நேற்று பருத்தித்துறை நகரசபை முன்றலில் காலை 9:00 மணிமுதல் பிற்பகல்வரை  அவரது குடும்ப சகிதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது.
தமக்கு பாதிப்பான முறையில் அயல் வீட்டுக்காரர் ஒருவர் கட்டிடம் ஒன்றினை அமைத்து வருவதாக கடந்த வருடத்திலிருந்து அதாவது அயல்  வீட்டுக்காரர் கட்டிடம் கட்டுவதற்கு ஆரம்பித்த காலத்திலிருந்து பருத்தித்துறை நகர சபைக்கு முறையிட்டதாகவும்,  அதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் நகரசபையால்  எடுக்கப்படாத நிலையில் தாம் மீண்டும் மீண்டும் பல முறைப்பாட்டை செய்ததாகவும் ஆனால்  நகரசபை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையிலேயே இன்று குடும்ப சகிதம் தாம் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், தெரிவித்துள்ளார். மேலும் தான் ஒரு பருத்தித்துறை நகர் பகுதியில் வணிக நிலையம் ஒன்றினை நடாத்தி வருவதாகவும் குறித்த பிணக்கு காரணமாக அண்மையில் இரவு வேளை தனது வணிக நிலையத்தில் இனந்தெரியாதவர்கள் தன்மீது மின்சாரம் தடைப்பட்டவேளை மிக மோசமாக  தாக்குதல் நடாத்தியதாகவும்,  தெரிவித்தார்.
இது தொடர்பில் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் திரு இருதயராசாவிடம் கேட்டபோது போராட்டத்தில் ஈடுபடும் நபரால் தமக்கு  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைவாக தாம் தமது சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொண்டதாகவும், தெரிவித்தார்.
வீதியோரத்தில் முறையற்ற வகையில் கடைகள் அமைக்கப்படும் போது உடனடியாக பொலீஸாருடன் இணைந்து அகற்றும் நடவடிக்கையை மேற்கொள்ளும் நகர சபையினர் ஏன் இதனை செய்ய பின்னடிப்பை மேற்கொள்கின்றனர்.
குறித்த நபர் நகர சபை தலைவரிடம் கேட்ட போது உடனடியாக வேலைகளை நிறுத்துமாறு அறிவிக்கப்பட்ட போதிலும் அவர் கேட்காமல் தொடர்ச்சியாக வேலை செய்வதாகவும் அதற்கு உடனடியாக எதுவும் செய்ய முடியாதுள்ளது, இதுதொடர்பாக தமது கூட்டத்திலேயே முடிசெய்ய முடியுமென அசமந்த போக்கான பதிலை கூறியுள்ளார். அத்துடன் வேலையை நிறுத்துமாறு நகரசபையினர்  சுமார் ஒருவருட காலத்திற்கு மேலாக கடிதம் அனுப்பப்பட்ட போதிலும் இதுதொடர்பாக நகரசபை தலைவரோ செயலாளரோ சட்ட நடவடிக்கை எடுக்காமைக்கான காரணம் யாது? எனப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்