Fri. Apr 26th, 2024

கற்றல் நடவடிக்கை தளர்வின்றி நட

தளர்வில்லாமல் பாடசாலைகளை நடாத்த முடியும் என வடமாகாண  வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக யாழ் வலயக் கல்வி பணிமனை
யாழ்ப்பாண வலய நகர்புற  பாடசாலைகளின் அதிபர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் அவர்களின் ஏகோபித்த முடிவாக கல்விச்செயற்பாட்டில் தளர்வில்லாமல் பாடசாலைகளை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேவையான வகுப்புக்களை நேரடியாகவும் ஏனைய மாணவர்கள் zoom,teem செயலிமூலமாகவும் கல்வி வழங்கவும் அதனை தீர்மானிக்கும் பொறுப்பையும் அதிபர்கள் ஏற்றுள்ளனர். இதே போன்று ஏனைய பாடசாலைகளும் மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
1, பாடசாலைகள் மூடப்படாது கல்வி வழங்கப்படவேண்டும்.
2, பிரதான பரீட்சைகளை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புக்கள் நடாத்தப்படல் வேண்டும்.
3, zoom மூலமான கற்றல் செயற்பாட்டில் ஏனய மாணவர்களுக்கான இணைக்கப்படவேண்டும்.
4, ஆசிரியர் வருகை நேரம் தொடர்பிலும் தரித்திருந்து கற்பிக்கும் காலம் தொடர்பிலும் தளர்வுப்போக்கை கடைப்பிடிக்கலாம் .
5, இது ஒரு சமூகப் பொறுப்பு என்பதை உணர்ந்து செயற்படல் வேண்டும்.
6, கிராமப்புற பாடசாலைகளின் அருகில் இருந்து நகர்புறப்பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் தற்காலிகமாக அருகேயுள்ள பாடசாலைகளில் சென்று கற்றலில் ஈடுபட அனுமதிக்க முடியும். இதனை அதிபர்கள் செயல்படுத்தலாம்.
7, போக்குவரத்து நெருக்கடிகளுக்கு மாற்றாக மாணவர்களை சைக்கிள்களிலும் நடந்தும் பாடசாலைக்கு செல்ல ஊக்குவிக்க முடியும்.
8, எவ்வாறெனினும் ஒவ்வொரு பாடசாலை அதிபர்களும் உங்கள் பாடசாலைகளை நடாத்தும் பொறுப்பை ஏற்று செயற்படுத்துமாறு பணிக்கப்படுகின்றீர்கள்.
9, மாகாண கல்விப்பணிப்பாளரால் இது தொடர்பாக விபரிக்கப்பட்ட இணைக்கப்பட்டுள்ள விடயங்களையும் கவனத்தில் எடுத்து செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் வடமராட்சி கல்வி பணிமனை
போக்குவரத்து இடையூறாக உள்ள  பல அதிபர்களிடம் உரையாடிய போது, இடையூறின்றி கற்றலை வழங்க முடியும் எனவும், தெரிவித்துள்ளனர். மாணவர்களின் கற்றல் நிலையைக் கருத்தில்  கொண்டும், ஆசிரியர்களின் போக்குவரத்தையும் கருத்தில் கொண்டு அதிபர்கள் செயற்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வவுனியா வடக்கு வலயக் கல்வி பணிமனை
தகுந்த முறையில் மாணவர்களின் கல்வியை வழங்குமாறும் அவர் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்