Sun. Nov 28th, 2021

கரப்பந்தாட்ட பயிற்றுநர்களுக்கான விண்ணப்பம் கோரல்

கரப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர்களிற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சங்கமானது மாவட்டத்தில் கரப்பந்தாட்டத்தின் தரத்தினை உயர்த்துவதனையும், பலமான மாவட்ட அணியினை கட்டியெழுப்புவதனையும் இலக்காகக்கொண்டு கடற்கரை கரப்பந்தாட்ட மற்றும் கரப்பந்தாட்ட அபிவிருத்தி குழாமிற்கான வீரர்களை தேர்வு செய்துள்ளனர்.
ஆண்கள் பெண்களுக்கான கடற்கரை கரப்பந்தாட்டம் மற்றும்
 21 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான  கரப்பந்தாட்ட அணிகளுக்கு
தன்னார்வலர்களாக இனணந்து பயிற்றுவிப்பாளர் மற்றும் உதவிப்பயிற்றுபாளர்களாக செயற்பட விரும்புபவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆர்வமுள்ளவர்கள் தங்களது சுயவிபரக்கோவையினை Jaffnavolleyball@gmail.com என்ற மின்னஞ்சலூடாகவோ அல்லது யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சங்க உப செயலாளர் தயாளபாலனிடம் (0776622078) நேரடியாகவோ 27.10.2021 புதன்கிழமைக்கு முன்னதாக சமர்ப்பிக்குமாறு யாழ் மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்