Fri. May 10th, 2024

9 வயதில் பல்கலைக்கழக பட்டம் பெறவுள்ள குழந்தை

பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை ஒன்று ஒன்பது வயதில் பல்கலைக்கழக பட்டம் பெறவுள்ளார்.

லாரன்ட் சைமன்ஸ் என்ற அந்த குழந்தை ஐன்ட்ஹோவன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (TUE) மின் பொறியியல் படித்து வருகிறார் – சராசரி பட்டதாரி வயது மாணவர்களுக்கு கூட இது ஒரு கடினமான பாடமாகும்.
பல்கலைக்கழக ஆசிரியர்களால் ” அசாதாரணமானத குழந்தை ” என்று விவரிக்கப்படும் லாரன்ட் டிசம்பரில் தனது பட்டப்படிப்பை முடிகவுள்ளார்
பின்னர் அவர் மருத்துவப் பட்டப்படிப்பைப் படிக்கும் போது மின் பொறியியலில் பிஎச்டி ஆராய்ச்சி கற்கை நெறியையும் தொடங்கவுள்ளார் என்று அவரது  தந்தை தெரிவித்துள்ளார்.

இதனிடையே உலகில் உள்ள பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்கள் எல்லாம் லாரண்ட்க்கு பிஎச்டி கற்கை நெறியை வழங்க போட்டிப்போட்டு முன்வந்துள்ளன. இருந்தபோதிலும் தாங்கள் நிதானமாக யோசித்து முடிவெடுக்கவுள்ளதாக அவரது தந்தை தெரிவித்தார். பெற்றோர்கள் இருவரும் வைத்தியராக இருக்கின்ற நிலையில் தங்கள் குழந்தையின் இந்த திறமையை எப்படி பெற்றது என்பது குறித்து தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியுள்ளார்கள். அதிகமான மீன் உணவுகளை தான் கர்ப்ப காலத்தில் உட்க்கொண்டதாக தாயார் நகைச்சுவையாக தெரிவித்தார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்