Wed. May 8th, 2024

200 மீற்றர் ஓட்டத்தில் வி.தர்சன் தங்கம்

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான ஆண்களுக்கான 200 மீற்ரர் ஓட்டத்தில் வி.தர்சன் தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.
பருத்தித்துறை பிரதேச செயலக பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான ஆண்கள் பெண்களிற்கான தடகளத் தொடர் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்ரர் ஓட்டத்தில் பருத்தித்துறை சென்தோமஸ் விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவம் வி.தர்சன் தங்கப் பதக்கத்தையும், பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த
க.கஜானன் வெள்ளிப் பதக்கத்தையும், அதே கழகத்தைச் சேர்ந்த  நெ.வனுஜன் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்