Sat. May 4th, 2024

பாகிஸ்தான் அதிரடி; நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணத்துக்கு தங்கள் வான்வெளியை பயன்படுத்துவதற்கு தடை விதிப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். எதிர்வரும் செப்டம்பர் 21ம் தேதி அவர் தனது குழுவினருடன் இந்த விஜயத்துக்காக புறப்படவிருக்கிறார். இந்த நிலையில் அவரது வெளிநாட்டு பயணத்தின் போது பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதற்காக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் பாகிஸ்தானிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் பாகிஸ்தான் அரசு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது என்று வெளியுறவு துறை அமைச்சர் குரேஷி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியதில் இருந்து பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதோடு அவர்களிடையேயான ராஜதந்திர தொடர்புகளும் சீர்குலைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்