Thu. May 9th, 2024

பருத்தித்துறை நகரம் இருளில் – நடவடிக்கை எடுங்கள் மக்கள் வேண்டுகோள்

பருத்தித்துறை நகர சபைக்கு உட்பட்ட பகுதிகள் பல பகுதிகள் மின்விளக்குள் இன்றி இருளில் மூழ்கி உள்ளதாகவும், உடனடியாக வீதிகளுக்கு மின்விளக்குகளை ஒளிரச் செய்வதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பருத்தித்துறை நகரத்தின் பிரதான வீதியில் ஒரு பகுதியான துறைமுக வீதியில் கடந்த ஒரு மாதமாக மேலாக இருளில் முழ்கியதால் மக்களும் வர்த்தகர்களும் பெரும் துன்பத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பாக மக்கள் பருத்தித்துறை நகரசபையை தொடர்பு கொண்டு அறிவித்த போது அது எங்கட இல்லை, வீதி அதிகாரசபை உடையது.  நீங்கள் அவர்களுக்கு அறிவியுங்கள் எனவும்,
வீதி அபிவிருத்தி அதிகாரசபையை தொடர்பு கொண்ட போது அதற்கு எங்களின் பொறுப்பு அல்ல. பாராமரிப்பு சேவை நகரசபைக்குரியது என்கிறார்கள். இலங்கை மின்சாரசபைக்கு தொடர்பு கொண்ட போது உரிய தரப்பினர் தொடர்பு கொண்டு கடிதம் அனுப்ப வேண்டும் ஒவ்வொரு தரப்பினரும் குறிப்பிடுவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இது தொட‌ர்பாக பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் சுரேஷ் அவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது,
மக்களும் வர்த்தகர்களும் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பாக தவிசாளரை ஒரு கிழமைக்கு முன் தொடர்பு கொண்டு கேட்ட போது தனக்கு தெரியாது. நான் உடனே கடிதம் அனுப்புறேன் என்று குறிப்பிட்டார். ஆனால் மின்விளக்கு இதுவரை எதுவும் நடக்கவில்லை..
தவிசாளர் என்பவர் எப்பவும் தனது ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து பிரதேச மக்கள் மற்றும் நகரம் தொடர்பாக முழுமையான கண்காணிப்பில் இருக்க வேண்டும். ஏசி ரூம்மில் இருந்து வாகனத்தில் செகுசு வாழ்கை வாழ மக்கள் தெரிவு செய்யவில்லை….
     இதில் பொறுப்பு வாய்ந்தவர் களத்தில் இறங்கி உடனே செய்ய வேண்டியதை தட்டிகழித்து மக்களை ஏமாற்றுகிறார்கள். நகரத்துக்கு பொறுப்பானவர்களுக்கு நகரத்தின் மீது பற்று வேண்டும். மக்களால் தெரிவு செய்த சபையை கொண்டு ஆட்சி செய்ய அரசாங்கம் நியமித்தது இவ்வாறான பிரச்சினைகளுக்கு தலைவராக களத்தில் உடனடி பிரச்சினைக்கு தீர்வு காணவே..
அலுவலகத்தில் கோவைகளை ஏசி ரூம்மில் இருந்து பார்ப்பதற்கு உத்தியோகத்தர்கள் போதும்..
மக்கள் சபையின் ஊடாக தலைவரை தெரிவு செய்தது அலுவலகத்தில் தூசு தட்ட இல்ல…
மக்களுக்கு சேவை செய்ய… உண்மையாக மக்கள் சேவை செயற்பாட்டில் ஆர்வம் மற்றும் எமது நகரத்தில் பற்றும் இருந்தால் உடனடியாக தீர்வு எப்போதே வந்து இருக்கும். கடைசி வரை கதிரையை மட்டும் அலகரித்து மக்கள் சேவைகளை இழுத்தடிப்பதும் இதனை ஆதரித்து பாதுகாக்கும் ஏனைய ஆதரவு கட்சிகளுக்கும் மக்கள் தட்டி கேட்கும் வரை எமது நகரமும் தேசமும் எழுச்சி பெறாது எனவும் குறிப்பிட்டார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்