Sat. May 11th, 2024

நெல்லியடியில் இயங்கிய சுத்திகரிப்பு நிலையத்திற்கு சீல்

வடமராட்சி நெல்லியடிப் பகுதியில் இயங்கிய வந்த வாகன சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீதிமன்ற கட்டளையின் படி இன்று சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

கரவெட்டி பிரதேச சபையால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கே பருத்தித்துறை நீதிமன்றத்தினரால் குறித்த நிலையத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வரை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நெல்லியடி கொடிகாமம் வீதியில் இயங்கி வந்த வாகன சுத்திகரிப்பு நிலையம் வாகனங்களை சுத்திகரிக்கும் போது ஓயில் கலத்தல் அத்துடன் வாகனத்தை சுத்திகரிக்கும் நீர் வடிகட்டும் செயற்பாடுகளும் செய்யவில்லை போன்ற சூழலை மாசுபடுத்தும் செயற்பாடுகள் இனங்காணப்பட்டமையால் குறித்த வாகன சுத்திகரிப்பு நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக கரவெட்டி பிரதேச சபை செயலாளருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது,
குறித்த நிலையம் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற போது, குறித்த நிலையத்தினருக்கு பல தடவைகள் ஆலோசனைகள் வழங்கப்பட்ட போதிலும் அவர்கள் தமது குறைபாடுகளை நிவர்த்தி செய்யவில்லை. மக்களின் நலனுக்காகவே பிரதேச சபை இயங்குகின்றது. குறித்த நிலையம் மாத்திரமல்ல கரவெட்டி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் வாகன சுத்திகரிப்பு நிலையங்கள் எமது பிரதேச சபை உத்தியோகத்தர்களால் பார்வையிடப்படவுள்ளது. இதில் குறைபாடுகள் காணப்படும் வாகன சுத்திகரிப்பு நிலையம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்