Fri. May 3rd, 2024

தோல்வியிலும் மாஸ் வெற்றி! தர்ஷனுக்கு கிடைத்த அதிஷ்டம்!

பிக் பாஸ் தர்ஷனுக்கு கமலஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

பிக் பாஸ் தமிழ் சீசன் 3 இல் பங்கு பற்றிய போட்டியாளர்களில் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஷன் தியாகராஜனும் ஒருவர். ஆரம்பத்திலிருந்தே இவரின் நேர்மையான குணத்தால் தமிழ் பேசும் மக்களிடையே பிரபலம் அடைந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு பல ரசிகர்கள் உருவானார்கள். இவர் தான் பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் என்று எல்லோராலும் நம்பப்பட்ட நிலையில், பைனலுக்கே செல்லாமல் திடீரென பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

 

இது அவர்களது ரசிகர்களும், சக போட்டியாளர்களாலும் ஏன் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமலஹாஷனால் கூட நம்ப முடியாமல் இருந்தது. இது பெரிய அளவில் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்த போலியான பக்க சார்பான பிக் பாஸ்ஐ நாங்கள் பார்க்கமாட்டடோம் என்று சாதாரண மக்களில் இருந்து பிரபலங்கள் வரை கூறியிருந்தார்கள்.
வெளியில் வந்த தர்ஷன் தனது ரசிகர்களுக்கு நன்றி சொல்லி வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் இவ்வளவு மக்கள் என்னை ஆதரிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை, நான் டைட்டிலை வெல்லவில்லை ஆனால் நிறைய மக்களை வென்றிருக்கிறேன், அவர்கள் என்னை தங்கள் குடும்பத்தில் ஒருவனாக நினைக்கிறார்கள், இதற்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

 

இந்த நிலையில் தர்ஷன், தற்போது நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்தியன் 2 படத்தில் இளம் நடிகர் ஒருவரை நடிக்க வைக்க ஷங்கர் தேடி வருகிறார். இந்த ரோலுக்கு கமல்ஹாசன் தர்ஷன் பெயரை பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த செய்தி இன்னும் உறுதியாக வெளியாகவில்லை. மேலும் தர்ஷன் இன்னும் சில படங்களில் கமிட் ஆகி இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது. அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்த வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையில் லிப்ரா ப்ரொடக்ஷன் தர்சனை வைத்து படம் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக லிப்ரா நிறுவனம் பதிவிட்டுள்ள டிவிட்டில் “டியர் தர்ஷன், இறுதியாக உங்கள் விளையாட்டு முடிந்துவிட்டது. ஆனால் கோலிவுட்டில் உங்கள் ஆட்டம் தொடங்கவுள்ளது. லிப்ரா புரடெக்ஷனிடமிருந்த வாழ்த்துகள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தர்ஷன் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்