Fri. May 10th, 2024

தொலைக்காட்சி மூலமாக கோரோனோ விழிப்புணர்வை ஏற்படுத்த கோரிக்கை

ஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில் மக்கள் தமக்கிடையில் 1மீட்டர்  இடைவெளி பின்பற்றுதல் வேண்டும் என்பதை வலியுறுத்தி தொலைக்காட்சி மூலமாக விழிப்புணர்வை மேற்கொள்ள கோரி பிரதம மந்திரிக்கு சிவன் அறக்கட்டளை ஸ்தாபகர் கணேஸ்வரன் வேலாயுதம் அவர்களால் கோரிக்கை கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டிலும் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற சூழலில் மக்கள் மத்தியில் அதனை பரவாது தடுப்பது தொடர்பிலான விழிப்புணர்வு காணப்படவில்லை. ஊரடங்கு பிறப்பித்தால் வீட்டில் இருந்தால் மட்டும் போதும் என நினைக்கும் மக்கள் ஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில் சாதாரண நாட்களைப் போலவே நடமாடுகிறார்கள். அரசாங்கம் குறிப்பிட்டது போல் நபர்களுக்கிடையில் 1மீட்டர்  இடைவெளி பின்பற்றப்படவில்லை.

விழிப்புணர்வு தொடர்பான செய்திகளை தொலைக்காட்சி வாயிலாகவே நாம் மக்களிடத்தில் கொண்டு செல்ல முடியும். முகக்கவசம் அணிந்தால் மட்டும் தொற்று வராது என நினைப்பது தவறு. முகக்கசவம் அணிந்தாலும் அணியாவிட்டாலும் இருவருக்கிடையில் 1மீட்டர்  இடைவெளி என்பது கட்டாயமாகும். தொலைக்காட்சி செய்திகள் எவற்றிலும் அதனை கட்டாயப்படுத்தி பின்பற்றுமாறு எடுத்து காட்டப்படவில்லை. ஊரடங்கு தளர்த்தப்பட்டு வெளியில் செல்லும் மக்கள் கூட்டமாகவோ அல்லது அருகில் நின்றவாறே பொருட்களை கொள்வனவு செய்வதை நாம் செய்திகளில் பார்க்கின்றோம்.

மக்கள் வீட்டிலிருந்து நீண்டநேரம் தொலைக்காட்சி பார்ப்பதில் செலவிடுகிறார்கள்.அவர்களுக்கான விழிப்புணர்வை தொலைக்டகாட்சி மூலமாக நாம் தெரியப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஊடகத்துறை மேற்கொள்ளல் வேண்டும். இலங்கையிலுள்ள எந்தவொரு தொலைக்காட்சி நிறுவனமும் 1மீட்டர் இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தி தெரிவிக்கவில்லை. மாறாக மக்கள் எவ்வாறு செயற்படுகிறார்கள் என்பதை மட்டும் படம் பிடித்து காட்டுகிறார்கள்.

கடைகளில் பொருட்களை வாங்கும் போது மக்கள் கடைகளில் கூட்டமாக நிற்கிறார்கள். கடைக்குள் ஒருவர் அல்லது இருவரை மட்டும் உள்ளெடுத்து அவர்களுக்கான பொருட்களை வழங்க வேண்டும். தொடர்ந்தும் வரிசையில் நிற்பவர்களை அவ்வாறே பின்பற்ற வேண்டும்.

தொலைக்காட்சி செய்தியில் பார்த்த போது பொலிஸ் அதிகாரி சரியான முறையில் முகக்கவசம் அணியாது ஊடகவியலாளருடன் அருகில் நின்று உரையாடுவதை காணமுடிந்தது. மேலும் அரசியல் வாதிகளும் சரியான ஒழுங்குபடுத்தல்கள் இன்றி அருகில் நின்றவாறு பொருட்களை வழங்குவதை காணமுடிந்தது.
எனவே மக்களுக்கு எடுத்து காட்டாக இருக்க வேண்டியவர்களே இவ்வாறான நடைமுறைகளை பின்பற்றாது தவறுவிடும் போது சாதாரண மக்களிடம் எவ்வாறு எதிர்பார்க்க முடியும். அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உரிய அதிகாரிகள் சரியான நடைமுறைகளை பின்பற்றல் அவசியம்.

எனவே தொலைக்காட்சி மூலமாக மக்கள் மத்தியில் 1மீட்டர்  இடைவெளி பின்பற்றப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டியுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்