Sun. May 12th, 2024

தேசிய மட்ட கடற்கரை கரப்பந்தாட்டம் தொண்டைமனாறு வீரகத்தி வெண்கலம். 

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு  இடையிலான தேசிய மட்ட கடற்கரை கரப்பந்தாட்டத்தில் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியால அணி கடந்த ஆண்டைப் போல் இவ்வாண்டும் வெண்கலப் பதக்கத்தை தமதாக்கிக் கொண்டனர்.
நீர்கொழும்பு கடற்கரையில் இன்று  இடம்பெற்ற அரையிறுதியாட்டத்தில்  மதவாச்சி மைத்திரிபாலசேன மகாவித்தியாலத்தை எதிர் கொண்ட தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை அணி 21:18 21:17 என தோல்வியடைந்தது. இதனையடுத்து மூன்றாமிடத்துக்கான ஆட்டத்தில் ரூவன் வெல்லவை வெற்றி கொண்டு மூன்றாமிடத்தை பெற்றுக்கொண்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்