Tue. May 14th, 2024

பிகில் பட டிரெய்லர், ஆட்டம் வெறித்தனமால்ல இருக்கு.. குவியும் லைக்ஸ்.. அதிரும் இண்டர்நெட்..

 

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே விஜய்யின் பிகில் பட டிரெய்லர் வெளியாகியுள்ளது. விஜய் – அட்லீ வெற்றிக்கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் பிகில். நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பிகில் படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். கால்பந்து பயிற்சியாளராகவும், வயதான தோற்றத்திலும் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். இதில் நடிகை நயன்தாரா மருத்துவ மாணவியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு பிகில் படத்தின் ட்ரெயிலர் வெளியானது. ஃபுட்பால் கிரவுண்டில் குட்மார்னிங் கோச் என பூவா தலையா போடுவதில் தொடங்ககும் ட்ரெயிலர் மோதல் மற்ற மாநிலத்தவரின் கிண்டலுக்கு ஆளாவது என தொடர்கிறது.

இதில் ஒரு விஜய் வயதான தோற்றத்தில் அதிரடி காட்டுகிறார். மற்றொரு விஜய் இளம் தோற்றத்தில் ஃபுட் பால் கோச்சாக அசத்தியிருக்கிறார். முழுக்க கால்பந்து விளையாட்டில் நடக்கும் அரசியலை மையப்படுத்திய கதைக்களம் என்பது படத்தின் ட்ரேயிலர் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த படத்தில் வரும் சிங்கப் பெண்ணே, வெறித்தனம் உள்ளிட்ட பிகில் பட பாடல்கள் ஏற்கனவே செம ஹிட்டாகியுள்ளது. இத்திரைப்படம் தீபாவளியை பண்டிகையையொட்டி வெளியாகிறது.

இந்நிலையில் பிகில் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. யூடியூப் அதிரும் அளவுக்கு லைக்ஸ் மற்றும் வியூஸ் குவிந்து வருகிறது. விஜய் ரசிகர்கள் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிகில் டிரெய்லரை டிரெண்டிங்காக்கி வருகின்றனர்.

பிகில் பட டிரெய்லர் வெளியாகி 17 மணித்தியாலத்தில் இதுவரை 14.6 மில்லியன் வியூஸ் யூட்யூபில். தலைவா.. விஜய்.. ஒவ்வொரு ஃப்ரேமும் ப்யூர்.. வெறித்தனம்.. தியேட்டர்ல பிகில் சத்தம் தெறிக்க போகுது..

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்