Wed. May 8th, 2024

டோனி கிண்ணத்தை கொலின்ஸ் மற்றும் ஞானமஸ் அணிகள் கைப்பற்றினர்

டோனி பான்ஸ் நடாத்திய டோனி வெற்றிக் கிண்ணத்திற்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கொலின்ஸ் மற்றும் ஞானமஸ் அணிகள் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

இதன் இறுதியாட்டங்கள் நேற்று இமையாணன் மத்தி விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
5 பந்துப் பரிமாற்றங்கள் கொண்ட இறுதியாட்டத்தில் ஞானம்ஸ் அணியை எதிர்த்து கரணவாய் ஆர்.சி.சி. அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஆர்.சி.சி. அணி 5 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 33 ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஞானம்ஸ் அணி 4.3 பந்துப்பரிமாற்றங்களில் 34 ஓட்டங்களைப் பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
ஆட்ட நாயகனாக ஞானம்ஸ் அணியை சேர்ந்த ஜொனி மற்றும் சிறந்த பந்து வீச்சாளராக சேந்திரன்,  தொடராட்ட நாயகனாக கெளசிகன் ஆகியோரும், சிறந்த துடுப்பாட்ட வீரராக ஆர்.சி.சி அணி வீரர் கிசோக் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
10 பந்துப் பரிமாற்றங்கள் கொண்ட இறுதியாட்டத்தில் கொலின்ஸ் அணியை எதிர்த்து அரசடி ஸ்பேர்ஸ் அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய கொலின்ஸ் அணி 10 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 60 ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்பேர்ஸ் அணி 10 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 45 ஓட்டங்களை மாத்திரமே பெற, கொலின்ஸ் அணி 15 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
ஆட்ட நாயகனாக கொலின்ஸ் அணியை சேர்ந்த ஜீவன், மற்றும் தொடராட்ட நாயகனாக துவாரகன் ஆகியோரும் சிறந்த பந்து வீச்சாளராக ஸ்பேர்ஸ் அணியைச் சேர்ந்த வினோ மற்றும் சிறந்த துடுப்பாட்ட வீரராக சாந்தன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
வடமராட்சி டோனி பான்ஸ் தலைவர் திவாகர் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக அகில இலங்கை சமாதான நீதவானும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் உணவு மேலாளருமான சுனாசீலன், சிறப்பு விருந்தினராக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர்
சத்தியேந்திரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்