Fri. May 10th, 2024

டொனால்ட் டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் அமெரிக்கா காங்கிரஸ்ல் நிறைவேற்றம், செனட் சபையும் ஆதரிக்குமா ?

டொனால்ட் டிரம்ப் பிரதிநிதிகள் சபையால் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்றாவது அமெரிக்க ஜனாதிபதியாக ஆகியுள்ளார். நேற்றிரவு அமெரிக்கா காங்கிரஸ் இல் இடம்பெற்ற இந்த வாக்களிப்பில் 51% ஆனார் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் ட்ரம்ப்பின் பதவி நீக்க தீர்மானம் நிறைவேறியுள்ளது.

இந்த தீர்மானம் செனட் சபையிலும் விசாரிக்கப்பட்டு மூன்றின் இரண்டு பெருமபான்மையானோர் ஆதரித்தால் அமெரிக்கா ஜனாதிபதி பதவியை ட்ரம்ப் இழப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் காங்கிரஸ் இரண்டு குற்றச்சாட்டுக்களில் வாக்களித்தது – ஜனாதிபதி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார், மேலும் அவர் மீதான விசாரணைக்கு காங்கிரஸ்க்கு தடை ஏற்படுத்தினார் என்ற இரு குற்றச்சாட்டுகளின் மீது வாக்களிப்பு இடம்பெற்றது.

இரண்டு வாக்குகளும் கட்சி அடிப்படையில் அமைந்திருந்தன என்றும் , கிட்டத்தட்ட அனைத்து ஜனநாயகக் கட்சியினரும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாகவும் அனைத்து குடியரசுக் கட்சியினருக்கும் எதிராகவும் வாக்களித்தனர்.அமெரிக்க சென்ட் சபையில் பிரேரணைக்கு ஆதரவாக மூன்றில் இரண்டு பெரும்பாண்மை பெறுவது கஷ்டம் என்பதால் ட்ரம்ப் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரியவருகிறது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்