Thu. May 9th, 2024

கோட்டாவை தேடிச் சென்று சந்தித்த சுமந்திரன்!! -பேசிவை குறித்த மனம் திறக்கிறார் பசில்-

கோட்டாபாய ராஜபக்ச சந்திக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனால் ஒரு சந்திப்பு நடந்தது என்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த பத்திரிகையில் சந்திப்பு தொடர்பில் பசில் கூறியவை:-
கேள்வி – கோத்தபாயவும் சுமந்திரனும் சந்தித்து பேச்சு நடத்தியதாக கூறப்படுகின்றதே?

பசில் – சில காலத்திற்கு முன்னர் பேச்சு நடத்தியிருந்தார்கள்.

கேள்வி – என்ன பேசப்பட்டது?

பசில் – அவர் சந்திக்க வேண்டும் என்று கோரியிருந்தார். அதனால் சந்திப்பு நடந்துள்ளது.

கேள்வி – யார் சந்திக்க வேண்டும் என்று கோரியது?

பசில் – சுமந்திரன்

கேள்வி – ஏன் என்று தெரியுமா?

பசில் – கோத்தபாய ராஜபக்ச அனைத்து தரப்பினருடனும் திறந்த மனதுடன் பேச வேண்டும் என்ற கொள்கை உள்ளவர். அதனால் இந்த சந்திப்பு நடைபெற்றது.

கேள்வி – வடக்கு, கிழக்கு பகுதிக்கு நீங்கள் சென்று அந்த மக்களின் தேவை என்ன என்பது குறித்து ஆராய்ந்து பார்ப்பீர்களா?

பசில் – நான் நிச்சயமாக செல்வேன். அத்துடன் மகிந்த ராஜபக்ச மற்றும் எமது வேட்பாளர் ஆகியோரும் வடக்குக்கு சென்று மக்களுடன் உரையாடுவார்கள்.

கேள்வி – உங்கள் தரப்பு வெற்றிபெற்றால் அடுத்த ஆடசியில் பசில் ராஜபக்சவின் வகிபாகம் என்ன?

பசில் – தற்போது என்ன செய்கிறேனோ அதனை செய்வேன். ஜனாதிபதி மற்றும் பிரதமரது பணிகளுக்கு உதவுவேன்.

கேள்வி – பதவிகளை பெற மாட்டீர்களா?

பசில் – அதனை மக்களே தீர்மானிக்க வேண்டும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்