Wed. May 8th, 2024

குழந்தைகளுக்கு சக்தி ஊட்டிய பானத்தை தவிர்ப்பது நல்லது!! 

சக்தி ஊட்டிய பானங்களும் மேலதிக ஊட்டச்சத்து மருந்தைகளையும் குழந்தைகளுக்கு தவிர்ப்பது நல்லது என்று ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

சக்தி ஊட்டிய பானங்களும் மேலதிக ஊட்டச்சத்து மருந்தைகழும் சிறு குழந்தைகளுக்கு இறப்பு,  வைத்தியசாலைக்கு அடிக்கடி  செல்லுதல் மற்றும் பலவகையான வருத்தங்களை ஏற்படுத்துவதாக ,புதிதாக மேற்கொள்ளப்படட  ஆராச்சியின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சக்தி ஊட்டிய பானங்களின் எதிர்மறையான விளைவுகள் மிகவும் ஆபத்தானவை என்று ஹார்வார்ட்  பல்கலைக்கழத்தின் ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

நம்முடைய இளைய சமுதாயம் தம்முடைய உடல்தசைகளை இறுக்கமானதாவும் மல்யுத்த பயில்வான்கள் போன்று தோற்றம் அள்ளிப்பதற்காக பலவகையான சக்தி மற்றும் புரதம் ஊட்டப்பட்ட பலவகையான பானங்களை பருகிவருகின்றார்கள். இது பலவகையான மருத்துவ கோளாறுகளையும், முடிவில் இறப்பையும் ஒருசில இளம் பருவத்தினரில் ஏற்படுத்தக்கூடியது.

இந்த ஆராச்சியானது எந்தவை ஊட்டச்சத்து (vitamin ) வகை என்று குறிப்பிட்டு சொல்லவிடடாலும், அதிகமாக எடுக்கக்கூடிய விட்டமின்  D கூட பாதிப்பை ஏற்படுத்தலாம். 2017 இல் செய்யப்படட ஆராச்சியின் முடிவில், ஊட்டச்சத்து பருகிய பங்குபற்றிய  275,000 பேரில்   கிட்டதட்ட  4 சதவிகிதம் பேர் ஆபத்தான மருதுவ   விளைவுகளை ஏற்படுத்திக்கொண்டார்கள். அதாவது கிட்டதட்ட  12,000 பேர் மருத்துவபராமரிப்புக்கு உட்படுத்தபட்டார்கள்.

ரெட் புல் (RED Bull ) என்ற பெயரை கேள்விப்படாதவர்களே இப்போது இல்லை. அப்படியாக சத்து ஊட்டப்பட் ட  பானங்கள் எல்லோரதும் வாழ்க்கையில் ஊடுருவிவிட்டது. இதை ஓரளவு பருகுவதன் மூலமோ அல்லது முற்றாக தவிர்ப்பதன் மூலம் தேவையில்லாத வருத்தங்களில் இருந்து உங்களை விலக்கிவையுங்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்