Fri. May 10th, 2024

உக்ரைன் பயணிகள் விமான விபத்துக்கு நாங்கள் தான் பொறுப்பு , இறுதியில் ஒத்துக்கொண்ட ஈரான்

உக்ரைன் பயணிகள் விமான விபத்துக்கு ஈரான் தான் பொறுப்பு என்று சுட்டிக்காட்டிய மேற்கு நாடுகளின் உளவுத்துறை அறிக்கைகளை நிராகரித்த சில நாட்களுக்குப் பிறகு, தனது இராணுவம் “தற்செயலாக” உக்ரேனிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது என்று ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த விமான விபத்தில் 176 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது

உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் 752 மனித பிழை காரணமாக தற்செயலாக சுட்டு வீழ்த்தபட்டது என்று அரசு தொலைக்காட்சி மூலம் இராணுவ அறிக்கை வெளியிட பின்னர் ஈரானிய ஜனாதிபதி மன்னிப்பு அறிக்கையையும் வெளியிட்டார்
ஈரான் இஸ்லாமிய குடியரசு இந்த அழிவுகரமான தவறுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறது. “என் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இழப்புகளை சந்தித்த குடும்பங்கள் அனைத்திற்கும் செல்கின்றன. அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்

ஈரானிய வெளியுறவு மந்திரி ஜவாத் ஸரீஃப் கருது வெளியிடும் பொழுது , இது ஒரு சோகமான நாள். இராணுவத்தினரின் உள்ளக விசாரணையின் ஆரம்ப முடிவுகள்: அமெரிக்க சாகசத்தால் ஏற்பட்ட நெருக்கடியின் போது ஏற்பட்ட மனித பிழை இந்த பேரழிவிற்கு வழிவகுத்தது என்று தெரிவித்தார் . எங்கள் மக்களுக்கும் , பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்ட பிற நாடுகளுக்கும் எங்கள் ஆழ்ந்த வருத்தம், மன்னிப்பு மற்றும் இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார் . ”

மேற்கு நாடுகள் ஈரானின் தாக்குதலில் தான் இந்த விமானம் வீழ்ந்ததாக கடந்த பல நாட்களாக குற்றம் சுமத்திய நிலையில் , நேற்றைய தினம் புதிய வீடியோ ஆதாரம் ஒன்றயும் வெளியிட்டிருந்தன. இந்த நிலையிலேயே ஈரான் இந்த அறிக்கையை வெளியிடுள்ளது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்