Fri. May 17th, 2024

மன்னாரில் கலாச்சார சீர் கேடுகள்  இடம்பெற்ற பற்றைக்காடுகள் மன்னார் நகர சபையால் அழிப்பு

மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பெரியகமம் பகுதியில்  உள்ள பற்றைக்காடுகளில் கலாச்சார சீர்கேடுகள் நடை பெறுவதாக  அப்பகுதி   மக்கள் மன்னார் நகர சபை உறுப்பினர் ஜோசப் தர்மன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் அவர் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து குறித்த பற்றைக்காடுகளை முழுமையாக துப்பரவு செய்துள்ளார்.

 

 மன்னார் நகர சபை பிரிவுக்குட்பட்ட பெரியகமம் பகுதியில்  உள்ள பற்றைக்காடுகளில் கலாச்சார சீர்கேடுகள் நடை பெறுவதாக  அப்பகுதி   மக்கள் மன்னார் நகர சபை உறுப்பினர் ஜோசப் தர்மனின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் குறித்த இடத்தை பார்வையிட்ட  நகர சபை உறுப்பினர் உடனடியாக இன்றைய தினம்(12) அவ் பற்றைகாடுகள் முழுவதும் கனரக இயந்திரம் கொண்டு முழுவதுமாக   துப்பரவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விடையம் தொடர்பாக கருத்து தெரிவித்த மன்னார் நகர சபை உறுப்பினர் ஜோசப் தர்மன்,,,
மன்னார் நகர சபைக்கு செந்தமான  மைதானப்பகுதிகள் அனைத்தும் துப்பரவு செய்யப்படுவதுடன் தனியார் காணிகளின் உரிமையாளர்களுக்கு தமது காணிகளை துப்பரவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
14 நாட்களுக்குள்  காணிகளில் உள்ள பற்றைகள் காடுகள் துப்பரவு செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு துப்பரவு செய்யப்படவில்லை எனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  சர்ச்சைக்குரிய பகுதியாக உள்ள இந்த மைதானம் பெரியகமம்  இளைஞர்களுக்கு வழங்கப்பட்டது.
  இவை பராமரிக்காமல்  இருப்பதால்  இந்த மைதானத்தை மன்னார் நகர சபைக்கு  சொந்தமாக்கி   தென்னை வாழை போன்ற பயிர்கள் செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும்  தெரிவித்தார்.
 அத்துடன் இவ்வாறான செயற்பாடுகள் நடை பெறுவதற்கான முக்கிய காரணம்  இடம் பெயர்வுகள் நிகழ்ந்த காலங்களில் காணிகளையும் வீடுகளையும் இலவசமாக பெற்றவர்கள்  பெரும்பாலானவர்கள் தங்களது சொந்த இடங்களுக்கு சென்று அங்கும் வீட்டுத்திட்டங்களைப் பெற்று குடியேறி உள்ளனர்.
 இப்பகுதியில் உள்ள வீடுகள் காணிகள் பராமரிப்பில்லாமல் பற்றைக்காடுகள் வளர்ந்து கலாச்சார சீர்கேடுகள் நடக்கும் இடமாக மாறியுள்ளது.
 ஆனால் மன்னாரை சொந்த இடமாக கொண்ட   எத்தனையோ குடும்பங்களுக்கு இருப்பதற்கு வீடு காணிகள் இல்லை. இதற்கான மாற்று நடவடிக்கைகளை மன்னார் நகர சபையால் எடுப்பதற்கு  தீர்மானித்தள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்