Fri. May 10th, 2024

ஈரான் அமெரிக்க இலக்குகளை தாக்கினால் , 52 இலக்குகள் ஈரானில் தாக்கியழிக்கப்படும் -ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானில் உள்ள 52 தளங்களை அமெரிக்கா குறிவைத்திருக்கிறது என்றும்,ஈரான் அமெரிக்கர்கள் அல்லது அமெரிக்க சொத்துக்களைத் தாக்கினால் “மிக வேகமாகவும் மிகக் கடினமாகவும்” இந்த 52 இடங்களும் தாக்கி அளிக்கப்படும் என்று ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ட்ரோன் தாக்குதலில் ஈரானிய உயர்மட்ட ஜெனரல் காசெம் சோலைமணியை அமெரிக்கா படுகொலை செய்ததைத் தொடர்ந்து அவரது கொலைக்கு பழிவாங்க போவதாக ஈரான் அறிவித்திருந்தது
ஜெனரலின் மரணத்திற்கு பதிலளிக்கும் விதமாக ஈரான் அமெரிக்காவின் சொத்துக்கள் மற்றும் அமெரிக்கர்களை தாக்கப்போவதாக தெரிவித்திருந்தது..
இதற்கு எச்சரிக்கை விடுவதற்காகவே ஜனாதிபதி டிரம்ப் இந்த எச்சரிக்கையை தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்

அமெரிக்கா 52 ஈரானிய தளங்களை அடையாளம் கண்டுள்ளது என்றும் இவை சில “ஈரான் மற்றும் ஈரானிய கலாச்சாரத்திற்கு மிக உயர்ந்த மட்டத்தில் முக்கியமானவை என்றும் தெரிவித்துள்ள ட்ரம்ப் , அமெரிக்காவை தெஹ்ரான் தாக்கினால்” மிக விரைவாகவும் மிக மோசமாகவும்  அமெரிக்காவின் பதிலடி இருக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்

இந்த நிலையில் ஈராக்கில் போராடும் ஈரானிய ஆதரவு அமைப்பு ஒன்று ஞாயிற்றுகிழமை மாலையில் இருந்து ஈராக்கிய படைகளை குறைந்தது 1000m தூரம் அமெரிக்கா படைகளிடம் இருந்து விலகி இருக்குமாறு கோரியுள்ளது. எந்த எச்சரிக்கை மூலம் மத்திய கிழக்கில் தாக்குதல்கள் எந்த நேரத்திலும் நிகழலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்